தமிழகத்தில் மணல் குவாரி தொடர்பான முறைகேடுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மணல் குவாரி வைத்திருக்கும் முக்கிய உரிமையாளர்கள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. மேலும் இந்த சோதனையின் ஆரம்ப கட்டத்தில் மணல் குவாரி உரிமையாளர்கள் சிலர் தங்கள் குவாரிகளை இழுத்துப் பூட்டிக்கொண்டு பதறி அடித்து ஓடிய காட்சிகளும் இணையதளத்தில் வைரல் ஆகியது, இவ்வாறு அமலாக்கத்துறை தொடர்ந்து தங்கள் சோதனையை தீவிர படுத்தியதால் அதில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்ததுடன் அதன் தொடர்புடைய பல முக்கிய புள்ளிகள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது .
காரணம் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் வெளிமாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர் என்ற தகவல் வெளிவந்தவுடன் அமலாக்கத்துறை ஒரு இடம் கூட விடாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் சோதனையை நடத்த முடிவு செய்து செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முதலில் தொடங்கிய சோதனை தற்போது கரூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது, தற்போது நடைபெற்று வரும் சோதனையில் அமலாக்கத்துறை ட்ரோன் கேமரா டிஜிட்டல் சர்வே கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இதில் நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மற்றும் அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இரு மணல் குவாரிகளும் மூடப்பட்டு விட்டன.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை அளவிட்டு நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சோதனையில் பல மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பல மணல் மாஃபியாக்கள் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலாக்க துறையின் சோதனை மணல் மாஃபியாக்களை குறி வைத்து தற்போது செயல்பட்டு வருவதால் மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் மாஃபியாக்கள் இதிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற செய்தியும் வெளிவந்துள்ளது
அந்த வகையில் தற்போது மூன்றாவது முறையாக அக்டோபர் 20ஆம் தேதி இரண்டு கார்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ராணுவ படை அதிகாரிகளின் உதவியுடன் கரூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக தங்கள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பாக நன்னியூர் மணல் குவாரி மற்றும் நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கு ஆகியவற்றில் நடைபெற்ற சோதனையில் அங்குள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் மணல் எத்தனை யூனிட்டுக்கு வழங்கப்படுகிறது என்றும் எத்தனை ரூபாய்க்கு விற்கப்படுகிறது மற்றும் கட்டண விவரங்கள் குறித்து அமலாக்க துறையினர் கேட்டறிந்து கொண்டனர் .
மேலும் விசாரித்ததில் வெளிவந்த அதிரடி உண்மைகளான ஒரு யூனிட்டுக்கு 700 ரூபாய்க்கு மணல் வாங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றும் அதற்கான அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் போன்ற செய்திகளும் கிடைத்துள்ளது மேலும் ஏற்கனவே அமலாக்கத்துறை ரெய்டு மணல் குவாரிகளை குறிவைத்து நடத்திய போது அதில் முக்கிய புள்ளிகளாக விளங்கிய கரிகாலன் உள்ளிட்ட நான்கு பேரிடம் அமலாக்கத்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர் பொன்முடி மணல் குவாரியில் செய்த மோசடியின் காரணமாகத்தான் அமலாக்கத் துறை வசம் வசமாக சிக்கிக் கொண்டு தற்போது வரை மீண்டு வராமல் இருந்து வருகிறார் அந்த வகையில் இந்த ரைடுகள் அனைத்தும் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனை குறி வைத்து தான் நடத்தப்படுகிறது என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன மேலும் அமலாக்கத் துறை வசம் அமைச்சர் துரைமுருகன் சிக்கும் பட்சத்தில் அது அறிவாலயத்தின் அஸ்திவாரத்தில் கை வைத்தது போன்றது என என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.