கடந்த ஏப்ரல் மாதம் உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய புகாரில் தலைமறைவாக இருந்து வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை தேடும் பொழுதே இவருக்கும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஏனென்றால் ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருந்தார் மேலும் இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான அமீருக்கும் ஜாபர் சாதிக்கும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இவர்கள் இருவரும் சினிமா பயணத்தை தாண்டி பல நிறுவனங்களை ஒன்றாக தொடங்கி நடத்தி வருகின்றனர் என்ற செய்திகளும் பரபரப்பாக வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குனரான அமீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதோடு தனக்கும் அமீருக்கும் இயக்குனர் தயாரிப்பாளர் என்ற உறவை தாண்டி எந்த ஒரு பழக்கமும் இல்லை என்று கூறினார். இருப்பினும் என் சி பி அமீரை விசாரணை நடத்துவதற்கு நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. பல மணி நேரங்கள் நடந்த அந்த விசாரணையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் படி கூறினால் ஆஜராக வேண்டும் என்று அமீரிடம் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குனரான அமீர் அலுவலகம் மற்றும் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை செய்தது. அதுமட்டுமின்றி ஜாஃபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்க துறை மேற்கொண்ட சோதனையானது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கட்சிகளில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய சினிமா பிரபலங்கள் ஜாபர் சாதிக் வீட்டிற்கு வெறும் கையோடு வந்து திரும்பும் பொழுது கையில் ஒரு பையுடன் சொல்வது இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று ஜாபர் சாதிக்கு வைத்திருந்த பாஸ்போர்ட்டை பார்க்கும் பொழுது அவர் பல நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் திமுகவின் முக்கிய அரசியல் பிரபலமும் உடன் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கு கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு அமீனா பானுவின் வங்கி கணக்கிலிருந்து தமிழ் திரைப்பட இயக்குனரான அமீருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது குறித்து ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் கேள்வியை முன்வைத்த பொழுது, அந்த பணத்தை ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகவும் ஜாபர் சாதிக் கூறியுள்ளார். மேலும் போதை பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தை பேரிச்சம்பழம் இறக்குமதி வியாபாரத்தில் சம்பாதித்தது போல ஜாபர் கணக்கு காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜாஃபரின் இரண்டாவது தம்பியான மைதீன் வங்கி கணக்கிலிருந்து அரசியலில் சில முக்கிய புள்ளிகளுக்கு 21 கோடி ரூபாய் பணம் கைமாறி இருப்பதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் யார் யாரின் வங்கி கணக்குகளுக்கெல்லாம் இந்த பணம் சென்றுள்ளது என்பது மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவதாகவும் வெளியில் கூறினால் விசாரணை பாதிக்கப்படும் என்பதாலேயே அவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பதாகவும் என் சி பி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது