தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும் பொழுது அவை அனைத்துமே திமுகவிற்கு எதிராகவே இருந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் முதலில் திமுகவிற்கு சாதகமாக இருந்த பலரும் தற்பொழுது இல்லாமல் போய் விட்டனர். அதிலும் குறிப்பாக சினிமாவில் இருந்தவர்கள் தற்பொழுது திமுகவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
அதே பிரச்சனை தற்பொழுது தமிழகத்தில் நீடித்துக் கொண்டு செல்லும் பொழுது எதற்காக குரல் கொடுக்கவில்லை என்று சினிமா பிரபலங்கள் முன்னிலையில் மக்கள் முன்வைக்கும் கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லாமல் வாயடைத்து போய் உள்ளனர். சமீபத்தில் கூட பா ரஞ்சித் அவர்கள் தனது ஓட்டினை வரப்போகும் 2026 ஆம் தேர்தலில் மாற்றி போட வேண்டும் என்று கூறிவந்தது பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. இதுபோன்று சினிமா பிரபலங்களுக்கு திமுகவின் மீது இருந்த நம்பிக்கை குறைந்து வரும் சமயத்தில் பொதுமக்களுக்கு உரிய மனநிலை எப்படி இருக்கும் என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது மகனையும் துணை முதலமைச்சராக ஆக்கப் போகின்ற நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஒருங்கிணைப்பு குழுவில் சேர்த்து விட்டனர். இந்த நிலையில் தற்பொழுது முதல்வர் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் உதயநிதி ஸ்டாலின் தான் செய்து வருகிறார். இந்த நிலையில் திமுக தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்ட எதையுமே சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து அன்னதான கொள்கையை பற்றி தவறான கருத்துக்களை கூறி வருவது, பல பேட்டிகளில் அவரின் இஷ்டம் போல பேசி வருவது என தொடர்ந்து பல செயல்களில் உதயநிதி ஈடுபட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து எந்தவித பேட்டியும் அளிக்காமல் அமைதி காத்து வந்த உதயநிதி சமீபத்தில் திமுகவில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கடைசியாக பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக பணியாற்ற போவதாகவும் செய்திகள் பரவி வரும் சமயத்தில் எப்படியாவது வரப்போகும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைத்து இத்தொடர்ந்து எல்லா பொறுப்புகளையும் அவரிடமே கொடுத்து எல்லா வேலைகளையும் அவரையே பார்க்க வைத்து வருகின்றனர்.
ஏனென்றால் முதல்வருக்கு அடுத்ததாக உதயநிதி தான் என்று காண்பிப்பதற்காகவே இவ்வாறு செய்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது நடக்கவிருக்கும் 234 தொகுதிகளிலும் உள்ள பார்வையாளர்களை நேரில் சந்தித்து பேச போவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை வைத்து எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைத்து வருவதோடு உதயநிதிக்கு சினிமாவில் உள்ள பெயரினை பயன்படுத்தியும் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தை கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவே உள்ளது. மேலும் வரப்போகும் 2026 ஆம் ஆண்டில் நடக்கும் தேர்தல் திமுகவிற்கு எதிராகவே இருக்கும் என்றும், தமிழகத்தில் மாற்றுக் கட்சி ஒன்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.. மேலும் உதயநிதிக்கு 2026ல் ஒருபுறம் அண்ணாமலை, மறுபுறம் விஜய் என கடும் போட்டி இருக்கும் என உளவுத்துறை கூறியதால் இந்த நடவடிக்கையில் இறங்கிவிட்டது உதயநிதி தரப்பு எனவும் கூறப்படுகிறது....