24 special

வாரிசு அடிப்படையில் ஆளுநர் பதவி வழங்கவில்லை.. கத்துக்குட்டி உதயநிதிக்கு, தமிழிசை பதிலடி..!

Udhayanithi, Tamilisai
Udhayanithi, Tamilisai

மக்களவை தேர்தலுக்கு தென் சென்னை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நேரடியாக களத்தில் இறக்கியுள்ளது. திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பாக வேலை செய்து வருகிறார். பாஜக சார்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். தமிழச்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி தமிழிசை குறித்து விமர்சனம் செய்திருந்தார். என்னை பற்றி விமர்சனம் செய்ய அவருக்கு என்ன தகுதியிருக்கு என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். 


சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லவர்கள் ஆனால், ஜெயலலிதா இருக்கும்போது திமுக வெற்றி பெருவதற்கு திண்டாடியது... ஜெயலலிதா இல்லாததால் சென்னையில் திமுக தன் வசமாக மாற்றி 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சியாக பாஜகவை மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாகவே உதயநிதியை அதிமுக வேட்பாளர்கள் யாரும் விமர்சனம் செய்வதில்லை. தென்சென்னை லோக்சபா தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்கி உள்ளார். மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வட சென்னையில் ஆற்காடு வீராசாமியும் களம் இறங்கி உள்ளார். இதற்கு போட்டியாக பாஜக தனது வேட்பாளர்களை நேரடியாக இறக்கியுள்ளது. 

இதற்கிடையில் தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழிசை கடந்த தேர்தலில் இப்படித்தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அதே முடிவுதான் இந்த தேர்தலிலும் அவருக்கு. மீண்டும் அவர் வேறு ஏதாவது மாநிலத்தில் ஆளுநராக செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலுக்கும் விதமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழிசை சௌந்தராஜன், "என்ன பேச்சு இதெல்லாம்.. மக்களிடமே நான் கேட்கிறேன். உதயநிதிக்கு உயர்வு எப்படி வந்தது? அப்பாவை வெச்சி அமைச்சர் ஆயிட்டாரு. நான் எல்லாம் பாஜகவில் சேர்ந்து 25 வருடங்கள் ஆகிறது. அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, கஷ்டப்பட்டு உழைச்சு இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கேன். ஆனால், உதயநிதிக்கு அப்படியா? ராஜா வீட்டு கண்ணுக்குட்டி மாதிரி எல்லாமே உடனுக்குடன் கிடைச்சிருச்சு. கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு என்ன தகுதி உதயநிதிக்கு இருக்கிறது? அரசியலில் அவர் சாதித்தது என்ன? நான் ஒரு பெண்ணாக, மாநிலத் தலைவராக, 2 மாநிலங்களின் ஆளுநராக இருந்தேன். 4 முதலமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறேன் என்று உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே, திருவல்லிக்கேணி பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொது அவரை அப்பகுதி மக்கள் உள்ளே விடாமல் மழை வெள்ளத்தில் போது எங்கே போனீங்க.. இப்போ எதுக்கு வரீங்க ? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தென் சென்னயில் இதே பிரச்சனை தமிழச்சிக்கு ஏற்பட்டது. இந்தசூழ்நிலையில் மக்கள் பாஜகவுக்கு அங்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழிசைக்கு தென் சென்னையில் ஆதரவானது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. திமுக கோட்டையில் இந்த தேர்தலோடு அஸ்தமனம் ஆகிவிடும் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது தற்போது திமுகவின் திட்டம் ஏதும் மக்களிடம் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.