துர்கா ஸ்டாலினை இழுத்துப் பேசிய பொன்மொழி கடுப்பான முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியலில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தலைவர் அமைதியாக இருந்தாலும் உடன் இருக்கும் கட்சியினர்கள் அமைதியாக இல்லாமல் தங்கள் பங்கிற்கு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சனைகளைக் கொண்டு வந்து முதல்வர் முன்பு குவித்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் அமைச்சர் பொன்முடி தன் பங்கிற்கு என்று செய்த விவகாரங்கள் ஏராளம் முதலில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியதை இழிவுபடுத்தும் வகையில் ஓசி பஸ் என்று பெண்களை விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இரண்டாவதாக மக்கள் பொதுக்கூட்டத்தில், கல்லூரி படிக்கும் தன் மகளுக்கு அரசின் உதவித்தொகை இன்னும் வரவில்லை என்று கோரிக்கையை அமைச்சர் முன்பு வைத்த பெண்ணிடம் ஒருமையில் பேசி எவ இவ என்று கூறியதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கடுத்தும் அவர் அமைதியாக வில்லை கிராம மக்கள் பலர் அமைச்சர் பொன்முடியிடம் தங்களது குறைகளை கூறிக் கொண்டிருந்த நிலையில் செல்லங்குப்பம் பகுதியில் கடந்த 13 வருடங்களாக முறையாக குடிநீர் வசதி இல்லை என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆமாம் அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க என்று மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது எதிர்க்கட்சியினர்களுக்கு லட்டு போல் அமைந்தது.
இப்படி தொடர்ச்சியாக தனது வார்த்தைகள் மூலம் திமுக அரசிற்கு தலைவலியை ஏற்படுத்தி வந்துள்ளார் அமைச்சர் பொன்மூடி. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு முதல்வரின் மனைவியை பற்றியே பொதுவெளியில் குறிப்பிட்டு பேசியுள்ளார் இதனால் அறிவாலய தலைமையான முதல்வரின் குடும்பம் ஏக கடுப்பில் உள்ளது. அதாவது திமுக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் சாதனையை விளக்க சாதனை பொதுக் கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டங்களில் மேடைப் பேச்சாளராக பேசுபவர்கள் தனது வார்த்தைகளை கவனமாகவும் தான் கூறிய அனைத்துக்கும் ஆதாரங்களுடனும் பேச வேண்டும் ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள் உள்ளது மேலும் நாம் பேசுவதை ஒட்டியும் வெட்டியும் வீடியோக்களாக வெளியிட எதிர்க்கட்சிகள் காத்திருக்கிறார்கள் என்றும் எச்சரித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இப்படி முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் எச்சரித்தும் அடுத்த சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் அமைச்சர் பொன்மூடி. அதாவது சாந்தகுமாரி எழுதிய கதை சொல்லும் குறள் என்ற நூலை முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வெளியிட்டார் அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். அடுத்து இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி திமுகவின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிறகு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலினை புகழ்ந்து பேசினார் அதாவது இவர் புகழ்ந்து பேசிய வார்த்தைகளை இவருக்கு பின்னால் சர்ச்சையாக கிளம்பியுள்ளது.
மனைவி அமைவதெல்லாம் வரம், முதல்வரின் அரசியலுக்கு ஆலோசனை சொல்லும் திறமை மிக்கவர் துர்கா ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். ஏற்கனவே தமிழக ஆட்சியில் முதல்வர் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி துர்காஸ்டாலினை பற்றி கூறியிருந்தது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை அமைச்சர் பொன்முடி கூறியதால் ஏற்பட்ட பின்விளைவுகளை பொறுத்துக் கொண்ட அறிவாலயம் இனிமேலும் பொறுத்து கொண்டால் அது நமக்கே ஆபத்தாக மாறிவிடும் ஆதலால் மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் அதில் அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் குடும்பம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொன்முடி ஆதரவாளர்களோ ஊடகங்கள் அமைச்சர் பொன்முடி என்ன பேசினாலும் அதை சர்ச்சையாக மாற்றுக்கிறார்கள், இவற்றை எல்லாம் கண்டு கொண்டால் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்டி வருவது குறிப்பிடத்தக்கது