இனிமேல் திமுக கூட்டணியை நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது ந என திருமாவளவன் தரப்பு அதிமுக பக்கம் செல்ல முடிவு எடுத்து இருப்பது அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருப்பதுடன் அதில் கூறப்படும் அரசியல் கணக்குகள் ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கின்றன.
திருமாவளவன் சமயம் கிடைக்கும் நேரமெல்லாம் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவின் இணைய வேண்டும் என இருப்பது போன்று அவரின் அரசியல் நடவடிக்கைகள் தெரிகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு மரியாதை இல்லை என அரசியல் விமர்சனங்கள் எழுவதும், 2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதுவும் உதய சூரியன் சின்னத்தில் திருமாவளவனினை நிற்கவைக்க வேண்டும் என்று திமுக தரப்பு யோசித்து வருகிறது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அப்படி எதுவும் நடப்பதற்குள் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய வேண்டும் என்று திருமாவளவன் திட்டமிட்டு தனது அரசியல் முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவனை நிற்கவைக்க திமுக திட்டமிட்டதும் கடைசி நேரத்தில் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து பானை சின்னத்தில் நின்றார், ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தையே உலுக்கி வரும் செய்தியாக கள்ளச்சாராய விவகாரம் பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இது தான் சந்தர்ப்பம் என்று அதிமுக பக்கம் துண்டைப் போட்டு வைத்துள்ளார் திருமாவளவன்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்து உள்ள எக்கியார்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக சட்ட விரோதமாக கள்ள சாராயங்கள் அப்பகுதி மக்களின் வீட்டிற்கு சென்று விற்பனை செய்யும் அளவிற்கு கள்ளச்சாராய வியாபாரம் நடந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 13ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்திய 20க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 13 மேல் உயிரிழந்த நிலையில் எஞ்சி இருப்பவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவற்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் எம் பி ரவிக்குமார் மற்றும் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ போன்றோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
இந்நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அரசின் முழு அனுமதி பெற்று நடைபெற்று வரும் டாஸ்மார்க் கடை இருக்கும்பொழுதே கள்ளச்சாராயம் புழக்கம் இந்த அளவு அதிகரித்து உயிர்பலியை வாங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மது விற்பனையில் அரசு ஏன் கவனம் செலுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, இதனால் பாதிப்பு தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த சம்பவத்தில் இருந்தவர்களுக்கு நிவாரணத் தொகையை முதலமைச்சர் இழப்பீடாக வழங்கினாலும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவே அரசு மதுபானங்களை விற்பனை செய்கிறது என்ற கருத்து நல்லதல்ல, மதுவிலக்கு உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும் படிப்படியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் கலாச்சாராயம் விற்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
நாங்கள் தற்போது கூட்டணி கட்சி தான் மதுவிலகிற்கு நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஆனால் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும் பொழுதும் எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டத்தை நடத்தி இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பிய திருமாவளவன், எதிர்க்கட்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்தினால் அவரோடு இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
இப்படி திருமாவளவன் வெளிப்படையாகவே செய்தியாளர்கள் மத்தியில் அதிமுகவின் பக்கம் செல்வேன் என்று கூறியது திமுகவிற்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்வது என்றும் திமுக தலைமை யோசித்து வருகின்ற நிலையில், திருமாவளவன் நடவடிக்கைகள் வேறு அதிமுக கூட்டணிக்கு செல்ல இருப்பது போல் தெரிவதால் விவகாரம் திமுக விசிக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ விசிகவை கூட்டணி உள்ளே கொண்டுவந்தால் பாமக மற்றும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவார்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்கலாம் என கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.