அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மக்கள் இடத்திலும் திமுகவின் பேர் புகழ் எல்லாம் ஒரு அடியாக தலைகீழாக மாறியுள்ளது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்ததாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளே போகலாம் என விமர்சனம் வருகிறது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் தொடர்பான இடத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. நாளை வரக்கூடிய தீர்ப்பை பொறுத்தவரை பதவி பறிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக அமைச்சர் இப்படி சிக்கி தவிக்கும் நேரத்தில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை ஒரு கயிறு கிடைத்தார் அதனை பிடித்து கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் இப்போது பொன்முடி சிக்கியது குறித்து யாரும் பேசாமல் இருக்கின்றனர். இது குறித்து எந்த வித அறிக்கையும் வெளியிடவில்லை. இதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது, அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. அப்படி இருக்க.. அதிமுகவிற்கு இதே நிலை வரலாம். அதிமுக மாஜி அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் உள்ளன. பலருக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்குகள், சொத்து குவிப்பு ஏன் கொலை வழக்குகள் கூட உள்ளன. அப்படி இருக்க இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தரப்பு அமைதியாக இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது உள்ள வழக்குகளை சீசரிக்க அனுமதி அளித்ததில் இருந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் எவரும் நாவை அடக்கி பேசிவருவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மேலும், ஊழல் செய்த எல்லா அரசியல் தலைவர்களும் பாஜகவை கண்டு பயந்து பாம்புவதாகவும் கூறப்படுகிறது.