24 special

அசால்ட்டாக அண்ணாமலை வைத்த செக் ...!கர்நாடகவில் சிக்கப்போகும் திமுக..!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தற்போது மேகதாது அணை கட்டுவது தான். காமராஜர் பிறந்த நாளன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர் 'தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முடியாது என்ற வலுவான கருத்தை' செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 


மேலும் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் “தமிழகத்திற்கு இந்த வருடம் தண்ணீர் இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் ? பிறகு எப்படி தமிழகத்தில் சாகுபடி நடக்கும்?”  மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஏன் இதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கவில்லை. என்றும்  கர்நாடக அரசை கண்டித்து அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்றும் சரமாரியாக தனது கேள்விகள் மூலம் திமுக இந்த பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என ஆணித்தரமாக கூறினார். 

மேலும் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்கள் மற்றும் துரைமுருகன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என அனைவரும் கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற தனது வலுவான கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி கேள்வி கேட்காமல் இருக்கிறார். பாஜகவின் முக்கிய குறிக்கோள் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வரவேண்டும் மற்றும் மேகதாது அணை கட்டக்கூடாது, 2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்க வேண்டும் என்பதற்காக பேரம் நடந்து கொண்டிருக்கிறதா? என்றும் தமிழக விவசாயிகளின் நிலைமையை விட்டுக் கொடுக்க முதலமைச்சர் மற்றும் துறைமுருகன் தயாராகி விட்டார்களா என்ற அதிரடியான கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை எழுப்பினார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக மேகதாது விஷயத்தில் ஸ்கோர் செய்து வருவதை அறிந்த திமுக அமைச்சர் துரைமுருகன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். 'நட்பா இருந்தாலும் சரி பகையாக இருந்தாலும் சரி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் அண்ணாமலை தற்பொழுது மக்கள் மத்தியில் மேகதாது அணை விஷயத்தில் தீவிரமாக அரசியல் செய்து வரும் காரணத்தினால் திமுகவிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமை உணர்ந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட  காலத்திற்கு குறைவாக உள்ள நிலையில் கண்டிப்பாக வாக்குகளில் இது எதிரொளிக்கும் என தெரிந்து  அண்ணாமலை அரசியலில் ஸ்கோர் செய்து விடுவாரோ என்று எண்ணி துரைமுருகன் மேகதாது அணை விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் கர்நாடக சென்றுள்ள நிலையில் அங்கு மேகதாது விஷயத்தை முதல்வர் பேசி முடிவெடுக்க வேண்டும் இல்லையேல் தமிழகம் திரும்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவேன் என அண்ணாமலை கூறியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மேகதாது விஷயத்தில் அண்ணாமலை திமுகவிற்கு செக் எப்படியும் திமுகவை மேகதாது விஷயத்தில் சிக்க வைத்துவிடும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.