24 special

மின்தடை திட்டமிட்ட சதியா ...!விளக்கம் கொடுத்த மின்வாரியம்

Annamalai,amitsha
Annamalai,amitsha

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது சென்னையில் பாஜகவினர் திரண்டு பலத்த வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாஜகவினர் முன்னரே சென்னைக்கு வந்து குவிந்து மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்க திட்டமிட்டு சென்னை விமான நிலையம் முதல் அவர் தங்கும் ஹோட்டல் வரை அவரை வழிநெடுகிலும் வரவேற்க பல்வேறு தரப்பினரும் குவிந்திருந்தனர். 


நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாஜகவினர் சார்பில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வரவேற்பு கொடுக்கப்பட்ட சமயத்தில் எதிர்பாராத விதமாக உடனே அந்த பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. 

உடனே இந்த மின் வீட்டிற்கு காரணம் திமுக அரசின் காழ்புணர்ச்சிதான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது எதிர்பாராத விதமாக அல்ல இது திமுகவினரின் திட்டமிட்ட சதி தான்! ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக உள்ளார், அவர் மீது நடக்கும் ரெய்டுகள் நடப்பதால் அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் இந்த மின்வெட்டு நடக்கிறது என்றெல்லாம் கூறி நேற்று பாஜகவினர் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். வீதியில் இறங்கி போராடினார்கள், உடனே அங்கு நிலைமை விபரீதமாவதை புரிந்து கொண்ட அண்ணாமலை அவர்களை சமாதானப்படுத்தினார். 

பின்னர் அண்ணாமலை கூறியதாவது, 'மின்சாரம் தடைபட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மின்சார வாரியத்தின் மீது நம்பிக்கை உள்ளது எனவே வருங்காலங்களில் இதுபோன்று நடக்கக் கூடாது என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இப்படி அண்ணாமலை மின் விநியோகத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறியதும் பாஜகவினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 

அதன் பிறகு மின்வாரிய தரப்பிலிருந்து அலறி அடித்துக் கொண்டு தகவல்கள் பறந்துள்ளன. எங்கு மின்தடை ஏற்பட்டது? யார் காரணம் எதற்காக இந்த மின்தடை அதுவும் உள்துறை அமைச்சர் வருகையில் அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்தடை ஏற்பட்டது அனைவரின் வேலை கூட போவதற்கு காரணமாக இருக்கும் என மின்துறையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் அனைவரும் பரபரத்தனர். இதனால் மின்வாரியமே களேபரமானது, உடனடியாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அமைச்சர் செந்தில் பாலாஜி உடனே இதற்கு விளக்கத்தை கொடுத்து விடுங்கள் இல்லையே இது பல அரசியல் காரணங்களுக்கு வழிவகுக்கும் என கூறிய காரணத்தினால் மின்வாரிய தரப்பிலிருந்து தற்போது இதற்கு விளக்கம் தரப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்த பாதையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதே மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின் வினியோகம் தடைபட காரணம் என தெரிவித்தார்.இப்படி உள்துறை அமைச்சர் வருகையின்போது ஏற்பட்ட மின்தடைக்கு அமித்ஷா சென்னையை விட்டு கிளம்பும் முன்னரே மின்வாரியம் அலறியடித்து விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.