
பரப்பப்பட்ட பொய் செய்தி கோபமடைந்த ஆதீனம் ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரத்தை அளிப்பதற்கு முன்பு ஆட்சி மாற்றத்திற்கான ஏதாவது ஒரு குறியீடு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார், அதன்படி ராஜாஜியின் உதவியுடன் செங்கோலை ஆட்சி மாற்றத்திற்கு பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்து, தஞ்சாவூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்தின் உதவி மூலம் செங்கோல் வடிவமைக்கப்பட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று பிரத்தியோக விமானத்தில் ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் செங்கோலி எடுத்துச் சென்று அன்றைய வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் அவர்கள் ஒப்படைத்தனர். உயர் குருமார்களால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு பிறகு அதனை மவுண்ட்பேட்டன் பிரபுவிடமிருந்து நேரு பெற்றுக் கொண்டார். இத்தகைய பாரம்பரியமிக்க செங்கோலை தற்போது புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கையில் அருகே பிரதமர் நரேந்திர மோடி நிருவியுள்ளார்.
முன்பு இருந்த பாராளுமன்றத்தில் இடவசதிகளின் குறைவு காரணமாக ரூபாய் 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது அதனை கடந்த மாதம் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில் பல எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வாதிட்டு இவ்விழாவை புறக்கணித்தனர். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டுள்ள சோழர்கால செங்கோல் அலகாபாத் மியூசியத்திலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஆதினங்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தமிழக பாரம்பரிய முறையில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது குறித்து பெருமை அடைகிறோம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனாலும் செங்கோல் பற்றிய விமர்சனங்கள் விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி ஒன்று அளித்துள்ளார் அதில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோலை முன்னாள் நேருவிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அன்றைய வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட் பிரபுவிடம் நாங்கள் வழங்கியது பற்றிய எந்த ஒரு ஆதாரமும் எங்களிடம் இல்லை என்று அவர் கூறியதாக பேட்டியில் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருவாடுதுறை ஆதினங்கள் ஆங்கில நாளிதழ் பேட்டியில் வெளியிடப்பட்டுள்ள கருத்து தவறானது என்றும் தவறான கருத்துக்கள் பரப்பபடுவதாகவும் கூறியுள்ளனர்.
அதன்படி திருவாடுதுறை ஆதீனங்கள், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நிபுணர்கள் ஆதீனத்தை சந்தித்து பேட்டி கேட்டுள்ளனர் அதன்படி செங்கோலின் வைபவத்தில் திருவாடுதுறை ஆதீனங்கள் பங்களித்ததில் பெருமை அடைகிறோம் என்று கூறி உள்ளனர், இதன் பிறகு எங்கள் சார்பில் ஒரு குழு செங்கோலை எடுத்துக்கொண்டு டெல்லி சென்று கங்கை நீரில் அபிஷேகம் செய்து அதனை மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தோம் இதனை 1947-ல் இருபதாவது மகா சன்னதிதானத்தில் தனிச் செயலாளராக இருந்தவருடைய தற்போதைய வயது 96, அவருடைய பெயர் மாசிலாமணி பிள்ளை, அவரும் இந்த விஷயத்தை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் ஊடகத்தில் இப்படி தவறான செய்தி பரப்பப்படுவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தி இருப்பது போன்ற புகைப்படங்கள் எங்களிடம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் செங்கோலை நாங்கள் வழங்கிய பொழுது கேமராக்களுடன் செல்லவில்லை மேலும் தற்போது பிரதமர் மற்றும் முதல்வரை சந்திக்கும் பொழுதும் புகைப்படங்கள் நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை இதுவே உண்மை ஆனால் இதனையே சிலர் ஆதாரம் இல்லை என்று தவறான கருத்தை வெளியிடுகின்றனர். மேலும் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் என்று திருவாடுதுறை ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படி பிரதமர் மோடி,பாஜகவை இழிவுபடுத்த ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவது ஆதீனங்களை கோபப்படுத்தியுள்ளது எனவும் இது வரும் காலங்களில் ஆதீனங்கள் ஒன்றுகூடுவதற்கு வழிவகுக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இடதுசாரி திமுக கூட்டணி அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.