தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி பாஜக நிர்வாகிகள் பலரும் தமிழகத்தில் ஆளும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரை பணி செய்ய விடாமலும், நேர்மையாக பணி செய்யும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் பல மேடைகளில் கூறி வந்தனர்.
இதனை முதல்வர் தொடங்கி திமுக அமைச்சர்கள் என பலரும் மறுத்து வந்தனர், தமிழக காவல்துறை நேர்மையாக செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர், இந்த சூழலில் பாஜக கூறியதை உண்மை என நிரூபிக்கும் வகையில் தற்போது ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
நேர்மையாக செயல்பட்ட காவல்துறை DSP யை திமுகவை சேர்ந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார், இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட அளவை தாண்டி மண் வெட்டிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்த DSP யை பாராட்டாத, திமுக எம் எல் ஏ.
உங்களுக்கு ட்ராக்டர் பறிமுதல் செய்ய உரிமை இல்லை, நான் தாசில்தாரிடம் பேசிவிட்டேன், சாவியை கொடுங்கள் என மிரட்டும் வகையில் பேசி இருக்கிறார், இதற்கு காவல்துறை அதிகாரியோ உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என அதிரடியாக பேசி இருக்கிறார்.
இந்த ஆடியோ வைரலாகும் நிலையில் இங்கு தான் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது, தவறு செய்தது யாராக இருந்தாலும் ஆளும் திமுகவை சேர்ந்த எம் எல் ஏ பேசினால் தாசில் தார் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவாரா? நேர்மையாக செயல்பட்ட dsp யை மிரட்டும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ மீது என்ன நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.