ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்தின் பொதுத்தேர்தல் ஏழு கட்டங்கள் நேற்று முடிவை எட்டி உள்ளது. கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இந்திய கட்சிகள் ஒவ்வொன்றையும் பரபரக்க செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், விவாதங்களும், குற்றச்சாட்டுகளும் அதற்கு எதிர் குற்றச்சாட்டுகள் என அனைத்திற்கும் வருகின்ற ஜூன் நான்காம் தேதி ஒரு முடிவை கிடைக்கப் போகிறது. முன்னதாக பாஜக தனது வெற்றியை இந்த முறையும் பதிவு செய்து ஹார்ட்ரிக் வெற்றியாக கொண்டாடும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளில் முக்கிய கருத்தாக கனத்த குரலில் முன் வைத்து வருகின்றனர். அதே சமயத்தில் பாஜக இந்த முறையை ஆட்சியை பெறாது என இண்டி கூட்டணி கட்சிகள் தங்கள் கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும் உலக அளவில் பார்க்கும் பொழுது இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் வழங்கப்படாத மரியாதை, சிறப்பு கவனிப்பு மற்றும் அளிக்கப்பட்ட கௌரவம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அதோடு இந்திய தேர்தலில் பரபரப்புகள் உலக அளவில் எதிரொளிப்பை பெற்று சில நாட்டுத் தலைவர்களும் பிரதம நரேந்திர மோடிக்கு மீண்டும் நீங்களே பிரதமராவீர்கள் அதற்கு எங்களது வாழ்த்துக்கள் என்ற தங்கள் வாழ்த்து கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர். அதே சமயத்தில் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவின் முன்னணி மற்றும் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளும் பாஜகவிற்கு சாதகமாகவும் பிரதம நரேந்திர மோடிக்கு சாதகமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்திய நாட்டில் மிக முக்கிய தேர்தல் வியூக அமைப்பாளராக பார்க்கப்படுகின்ற பிரசாந்த் கிஷோரும் பாஜகவின் வெற்றி இந்த தேர்தலிலும் அமையும் என்ற வகையில் தனது கருத்தினை பதிவு செய்து பாஜகவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.ஏனென்றால் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளில் வியூக அமைப்பாளராக பணியாற்றியவர். ஆனால் இந்த முறை அதாவது 2024 லோகபா தேர்தலில் திமுக தங்களுக்கு சார்பாக பணியாற்றும்படி பிரசாந்த் கிஷோரை அழைத்த பொழுதும் அவர் மறுப்பு தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றதோடு இதுவே திமுகவின் அடுத்தடுத்த பின்னடைவுகளுக்கான முதல் படி என்ற வகையிலான பேச்சுக்கள் எழுவதற்கு காரணமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து திமுகவின் வேட்பாளர்கள் பிரச்சாரங்களின் பொழுது மக்கள் மத்தியில் கண்ட கோபமும் மக்கள் முன்வைத்த கேள்விகளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மேலும் ஆட்டம் காண வைத்தது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்குப்பதிவுகளுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு குறித்து தனது கணிப்பை மீண்டும் பதிவு செய்துள்ளார். அதாவது பாஜக கடந்த முறை வென்ற இடங்கள் அல்லது அதைவிட சற்று சிறப்பான எண்ணிக்கையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜகவின் வெற்றி எண்ணிக்கையானது வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது.
அதேபோல கிழக்கு மற்றும் தெற்கிலும் பாஜகவிற்கு உதவ அதன் பிராந்திய கட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஆங்காங்கே பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி மற்றும் ஆதங்கம் இருப்பதாக தென்பட்டாலும் தேசிய அளவில் பரந்தபட்டு பார்க்கும் பொழுது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலையானது தென்படவில்லை! எனவே கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு நெருக்கமாகவோ அல்லது 303 என்ற வெற்றி எண்ணிக்கையை விட சற்று அதிகமாகவோ இம்முறை பாஜகவின் வெற்றி அமையும் என்று உறுதியாக கூறியுள்ளார்.மேலும் பிரசாந்த் கிஷோரை வாருங்கள் 2026 பணியை தொடங்கலாம் என அறிவாலயம் தரப்பில் இருந்து முதல்வரின் மருமகன் அழைத்ததாகவும், அதனை பிரசாந்த் கிஷோர் தட்டிக்கழித்ததாகவும் தகவல்கள் கசிகின்றன....