ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான லூலூ தேவ ஜமீலா வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கட்டற்ற பாலியல் உறவு சொர்க்கத்தில் வாழலாம் என பெரும்பாலான பெண்களை மூளைச் சலவை செய்து ஹைடெக் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டுள்ளார். இவரின் மாய வலையில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி கடந்த 2020ல் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் 'ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் கன்னியாகுமரி சேர்ந்த 45 வயதான லூலூ தேவ ஜமீலா ரகசிய வாட்ஸப் குழு ஒன்றை முற்போக்கு என்ற பெயரில் நடத்தி வந்தார். கட்டற்ற பாலியல் சுதந்திரம் என பெண்களை மூளைச்சலவை செய்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்து தவறான உறவில் இருந்து கொள்ளச் செய்துள்ளார்.
இப்படி கலாச்சார சீரழிவில் ஈடுபட்டு வரும் லூலூவின் மாய வலையில் நானும் சிக்கிக் கொண்டு உள்ளேன்! அதனால் லூலூ தேவ ஜமீலாவையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கன்னியாகுமரி சேர்ந்த பெண்மணி அளித்த இந்த புகாரை அடிப்படையாக வைத்து நீலாங்கரை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். லூலூ ஜமீலா ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வந்த காரணத்தினால் விமான நிலையங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த லூலூவை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து நீலாங்கரை காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட லூலூவிற்கு ஜாமீனும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வெளியான நிலையில் அதன் பக்கத்தை மனித உரிமை ஆக்ட்விஸ்டாக உள்ள பிரான்ஸ் தமிழச்சி, தனது எக்ஸ் பதிவில் 'கண்டதும் கைது Look out notice உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், 10 டிசம்பர் இரவு திருவனந்தபுரம் விமான நிலயத்தில் இறங்கிய லூலூவை கேரள காவல்துறை கைது செய்து தமிழ்நாட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது முன்ஜாமீனில் வெளிவந்துள்ள லூலூ தொடர் காவல்துறை கண்காணிப்பில் உள்ளார்' என்று பதிவிட்டுள்ளார் அதோடு பத்திரிக்கையாளர் சோனியா அருண்குமாரும் இது குறித்து பதிவிட்டுள்ளார். இப்படி தமிழகத்தில் தென் மாவட்டங்களை குறிவைத்து லூலூ என்ற பெயரில் பெண்களை தவறான வழியில் நடத்தி பெருங்குற்றத்தை சாதாரணமாக வெளிநாட்டில் எங்கேயோ அமர்ந்து கொண்டு செய்து கொண்டு வந்த லூலூ தேவ ஜமிலா மீது நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட வேண்டுமே தவிர ஜாமினில் அவர் வெளி வந்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள் நிலவி வரும் வேளையில் லூலூ தேவ ஜாமினில் வெளியில் வந்துள்ளார் என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது என பேசப்படுகிறது.
இருப்பினும் தென் மாவட்டங்களில் லூலூ என்ற பெயரில் நடந்து வந்த பாலியல் வேட்டைகள் அம்பலமாகியுள்ளதால் தற்பொழுது லூலூவிற்கு பின்னால் இருக்கும் கும்பல் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இது போன்ற நடவடிக்கைகள் இன்னும் எந்தெந்த பேரில் எங்கெங்கெல்லாம் நடைபெற்று வருகிறது அதற்கு தமிழகப் பெண்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இன்னும் தெரியாத புதிராக இருப்பதால் பெண்களை தவறான வழியில் நடத்துபவர்களுக்கு தகுந்த தண்டனைகள் கிடைக்கப்பட வேண்டும் என்றும் பெண்களும் இது போன்ற பெண்களின் ஆதரவுகளுக்கு இணங்காமல் தன் மன தைரியத்தோடு வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படுகிறது.