24 special

கேப்டன் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

Vijayakanth, Premalatha
Vijayakanth, Premalatha

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு தொண்டர்களை சந்திக்காமல் வீட்டோடு இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதனையடுத்து அவர் விரைவில் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி வேண்டும் என ரசிகர்களும், அவரது தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் அக்கட்சியின் பொது செயலாளரும் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.


1979ம் ஆண்டு சினிமாவில் இணைந்து நடிகராகவும் சினிமாவில் கால் பதித்தார், அதன் பிறகு படிப்படியாக மேலே சென்று 150க்கும் மேற்பட்ட படத்தில் நடித்த நடிகராகவும் 1984ம் ஆண்டு மட்டும் 18 படத்தில் நடித்து வரலாற்று சாதனையை படைத்தார். சினிமா துறையில் வளர்ச்சியை சந்தித்த பின் நடிகர்கள் சங்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்றார். 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. இதனால் ஆளும் கட்சி அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது .

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாமகவின் கோட்டையான விருத்தாசலத்தில் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தனித்து மக்களவை தேர்தலை சந்தித்த விஜயகாந்த் அதன் பிறகு 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கை கோர்த்தார் விஜயகாந்த். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அதன் பிறகு அதிமுக உடன் கூட்டணி பிளவு ஏற்பட்டுஇ தனித்து நின்னு தேர்தலை சந்தித்த தேமுதிக தோல்விகளை சந்தித்தது. 

இந்நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டார் , 2011 தேர்தலுக்கு பிறகு சந்தித்த துரோகங்களால் தான் விஜயகாந்துக்கு சறுக்கல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரின் உடல்நலக்குறைவுக்கு மிக முக்கிய காரணம் என்று பிரேமலதா உருக்கமாக தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வலிகளை நானும் அவரும் எதிர்கொண்டோம் என கூறிய அவர், விஜயகாந்த் உடல்நிலை குறைவால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். தற்போது அக்கட்சியின் பொது செயலாளராக தேர்தெடுகப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் நாளுமன்ற தேர்தலில் இருந்து தங்களது கட்சியை வளர்க்க முனைப்பு காட்டியுள்ளார். கூட்டணி குறித்தும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார் கூடிய விரைவில் தேசிய கட்சியுடன் கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.