
2001 ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோரின் நடிப்பில் சங்கர் மகாதேவன் இசையில் தமிழ் திரையரங்குகளில் வெளியான படம் ஆளவந்தான். மேலும் இப்படம் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு அப்ஹெ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நடிகர் கமலஹாசனின் வேறுவிதமான மாறுபட்ட இரட்டை வேடத்தில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு பெற்றிருந்தது இருப்பினும் அன்றைய காலகட்டத்தில் இப்படம் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அறிவியல் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்ட முதல் படமாகவும் ஆளவந்தான் படம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகர் கமலஹாசன் கடவுள் பாதி மிருகம் பாதி என்று தொடங்கும் பாடலை பாடும் பொழுது கண்ணாடியை கமல் உடைக்கும் கிராபிக்ஸ் மாயம் இதுவரை 2D அனிமேஷனில் வெளியிடப்படாத தமிழ் திரைப்படங்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பங்களில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தோல்வியை சந்தித்த இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பும் தேடலும் மக்கள் மத்தியில் அதிகரித்தது அன்று வெள்ளித் திரையில் பார்க்க முடியாமல் போன படத்தை சின்ன திரையிலாவது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கொண்ட சிலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அதன் வெளிப்படுத்தும் தொழில்நுட்பம் அப்போது உள்ள டிவிகளை தாண்டி பெரிய திரைகளில் பார்க்கும் பொழுதே அதிகம் தொழில்நுட்பங்களைக் கொண்ட படம் புரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கான சூழலும் டிவியில் பார்க்கும் போது அமையவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆளவந்தான் திரைப்படம் மறுபடியும் இரண்டாவது முறையாக ரிலிஸ் செய்யப்பட்டது.
பெருமளவிலான லாஜிக்கிலான திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ஆளவந்தான் படத்தில் உலக நாயகன் தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டி இருந்தார் எனவும், இந்த நிலையில் முதல் முறையாக இப்படம் திரையரங்குகளில் வெளியிட்ட போது போடப்பட்டிருந்த பட்ஜெட்டில் பாதியை கூட வசூல் செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டது ஆனால் தற்பொழுது ரீ ரிலிஸ் செய்யப்பட்டதில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ரியாஸ்கான் கூறிய தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் நடிகர் ரியாஸ்கான் கொடுத்த பேட்டி ஒன்றில், நான் பிறரிடம் சொல்லி சொல்லி தான் இப்படத்திற்கு டூப் போட்டது தெரியவரும், பிரபல பத்திரிக்கை நிறுவனமான குமுதத்தில் மட்டும் ஒரு சின்ன ஆர்டிகிள் அன்றைய காலத்தில் வெளிவந்தது அதை தவிர இதுகுறித்து வேறு எங்குமே பேசப்படவில்லை!
ஆளவந்தான் படம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம், அதனால் அப்படத்தில் நடிப்பையும் தாண்டி அப்படத்தில் கமலிற்கு பாடி டூப் நான் செய்ததால் படம் முழுவதும் நான் இருந்தேன், மத்த படங்களில் ஒரு பகுதியை நடித்த குடுத்துவிட்டு சென்று விடுவேன், ஆனால் இப்படம் முழுவதும் நான் அவருடன் இருந்தேன் ஏனென்றால் பாடி டூப் போட்டேன்! என்று தெரிவித்துள்ளார். அதாவது கமல் இப்படத்தில் ரெட்டை படத்தில் நடித்த பொழுது பெரும்பாலான பாடி டூப்பை ரியாஸ் கான்தான் போட்டு உள்ளார் என்பது மேலும் கமல் சும்மா வந்து போவார் என தெரியவந்துள்ளது இந்த விவகாரம், அப்போ ஆளவந்தான் படம் கூட கமலின் நடிப்பில் உருவாகவில்லையா என்று விமர்சனங்கள் பெருமளவில் முன் வைக்கப்படுகிறது.