24 special

வரலாற்று சம்பவம் செய்த மக்கள்.... விழுந்தடித்து ஓடி வந்த ஆ.ராசா...

a rasa
a rasa

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் என்ற உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கு பிறகு இரண்டு வருடங்களாக மகளிர் உரிமைத் தொகை குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது மக்களாகவே இது குறித்த கேள்வியை முன்வைக்க ஆரம்பித்த பொழுது செப்டம்பர் 15ஆம் தேதியான அண்ணாதுரையின் பிறந்த நாளன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தகவல்கள் வெளியானது. 


ஆனால் அதற்கு முன்பாகவே இந்த திட்டத்தின் கீழ் யார் யாருக்கு உதவித்தொகை வழங்கப்படும் யாருக்கு தகுதி உள்ளது தகுதி இல்லை என்ற பல வரையறைகளை திமுக அரசு நிர்ணயித்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தது. இந்த மகளிர் உரிமைத்தொகை மூலம் ஏழை எளிய குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம் ஏழை மக்களுக்கு உதவுவதே எங்களது முக்கிய நோக்கம் என்பதை மையமாக வைத்து இத்தனை வரையறைகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது, ஆனால் மக்கள் இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர், வாக்குறுதியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்பொழுது இதில் வரையறை நிர்ணயிக்கிறீர்கள் என்ன நியாயம் என்று கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்தது. 

இருப்பினும் திமுக அரசு நிர்ணயித்த வரையறைகளின் கீழ் மகளிர் உரிமைத் தொகையை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அந்த விண்ணப்பங்களிலும் பெரும்பாலானோர் நிராகரிக்கப்பட்ட செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி விண்ணப்பங்கள் ஏற்கப்படும் பெரும்பாலான குடும்ப தலைவிகளுக்கு இன்னும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதற்காக குடும்ப தலைவிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடும் செய்திகளும் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் மீண்டும் அரசு அலுவலகத்தை நாடலாம் என்று திமுக தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அரசு அலுவலகங்களில் குடும்பத் தலைவிகள் அலை மோதியதும் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதும் முக்கிய செய்திகளாக வெளியானது. 

இருப்பினும் தகுதி உள்ள பெண்கள் இந்த உரிமை தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திமுக எம்பி ஆ.ராசா நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி விவசாயிகளுக்கு சேர வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது எங்களால் வீதியில் இறங்கி போராடுவதற்கும் முடியாது ஏனென்றால் 79 வயதாகிவிட்டது உங்களுக்கு வயது என்ன? நீங்கள் ஏன் செய்த தர மாட்டீர்கள் என்று ஆ ராசாவின் காரை மறித்து அவரிடம் கேள்வி கேட்டார். இவை அனைத்திற்கும் ஆ ராசா எம்பி செய்து தருகிறேன் செய்து தருகிறேன் என்று கூறிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினார் என்று கூறப்படுகிறது. தனது சொந்த தொகுதியிலே ஆ.ராசா விரட்டப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் நீலகிரி தொகுதியிலேயே நின்று வெற்றி பெறலாம் என நினைத்துக் கொண்டிருந்த ஆ.ராசாவிற்கு தற்போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.