பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்ற நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்ல நட்புடன் இருப்பதில் கவனம் கொள்பவர். மேலும் இருநாட்டு நல்லுறவு பேணுவது, எதிரி நாட்டவர்களை கையாளும் முறை என மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தான் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக மோடி திகழ்கிறார்.
இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோணா உலகையே ஆட்டிப் படைத்து வந்ததால் எங்கும் சுற்றுப்பயணம் செய்ய வில்லை. இருப்பினும் வங்கதேசத்திற்கு கடந்த மார்ச் மாதம் பயணித்தார் பிரதமர். அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று ஐநா பொதுக்கூட்டம், அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் வரும் 29ஆம் தேதியன்று ஜி 20 மாநாடு மற்றும் ஐநா பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடுகளில் கலந்து கொள்ள இங்கிலாந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கிளம்ப உள்ளார். இத்தாலி சென்ற பின் முதலில் வாடிகனில் உள்ள போப் ஆண்டவரை சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. அதன்பிறகு 30 ஆம் தேதி மற்றும் 31-ஆம் தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். இந்த மாநாடு நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது, இனிவரும் சவால்களை எப்படி மேற்கொள்வது, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். மேலும் குறிப்பாக ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி பற்றியும் மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கசிந்த தகவல் உண்மையா அல்லது ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும் .