Cinema

நடிகர் விஜய் போட்ட பலே திட்டம்! அப்பாவை கழட்டி விட்டுட்டு வீட்டுக்கு வெளியே சைலண்டா கொட்டாய் போட்டது ஏன்? தலைமை சொன்னது என்ன ?

actor vijay
actor vijay

தமிழகத்தில் கிரிக்கெட் மற்றும் சினிமாவிற்கு என தனி மாஸ் உண்டு. அந்த வகையில் சினி தொகையை பொறுத்தவரையிலும் மிகவும் முன்னணி நடிகராக இருக்க கூடியவர்களுக்கு ரசிகர் மன்றம் இருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். 


படத்திலும், பட நிகழ்வுகளிலும் மேடையில் வீர வசனம் மற்றும் அரசியல் பேசும் விஜய் உண்மையில் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய ரசிகர்களுக்கு உண்டு. இப்படியான ஒரு சமயத்தில் விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தார். ஒருகட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பனிப்போரில் கடைசியாக எஸ் ஏ சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது.ஆனால் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் செயல்பாட்டில் இருக்கின்றது. 

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பகுதிகளில் போட்டியிட்டனர். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 161 பேர் போட்டியிட்டதில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் என்ற பகுதியில் விஜய்யின் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள் என அனைவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்களுக்காக சிறப்பு பந்தல் மற்றும் இருக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.



பின்னர் மதிய உணவுக்கு பின் மூன்று மணி அளவில் விஜய், அலுவலகத்திற்கு வர தேர்தலில் வெற்றி பெற்றவர்களிடம் கொஞ்ச நேரம் விவரம் கேட்டு பெற்று உள்ளார். மக்கள் என்ன சொல்றாங்க. நமக்கு  வரவேற்பு இருக்கா? என ...  அப்போது நாம் எப்படியும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அதற்கு ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்து எப்படியாவது அவர்கள் மனதில் இடம் பிடித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு குருப் போட்டோஸ், தனித்தனி போட்டோ எடுத்துள்ளனர். இதில் குறிப்பாக வருகின்ற 2024ஆம் ஆண்டில் நடக்க உள்ள எம்பி தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும், அந்தத் திட்டத்தை முன்னோக்கி இப்போது மக்கள் மனதில் இடம் பிடிக்க நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்று உள்ளனர். மேலும் மிக சிறந்த சேவையாற்றி அடுத்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் விஜய். ஆக மொத்தத்தில் படத்தில் எப்படி அரசியல் வசனம் பேசுகிறாரோ, விழா மேடைகளில் எப்படி அரசியல் வசனம் பேசுகிறாரோ ... 



அதேபோன்று உண்மையிலேயே அரசியலில் குதிக்க அத்தனை ஆசைகளை மனதில் அடக்கி வைத்து உள்ளார் விஜய். அதற்காக.. நேரம் வரட்டும்.. வரட்டும்.. என காத்திருப்பது இந்த நிகழ்வின்  மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆக மொத்தத்தில் தன் தாய் தந்தை தொடங்கிய கட்சியை நீதிமன்றம் வரை சென்று கலைக்க செய்துவிட்டு, நேரடியாக தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விஜய் மக்கள் இயக்கம் மூலமாக அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார் விஜய். அப்படிப்பட்ட அரசியலுக்காக தன்  தாய் தந்தையை கூட ஒதுக்கி வைத்துள்ளார் விஜய் என்றால் எப்பேர்ப்பட்ட அரசியல் தந்திரம் பாருங்கள்  என விமர்சனம் செய்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.