இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் திருமலைக்கு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் பார்க்கின்றன. சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலத்தில் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தெலுங்கானாவில் தேர்தல் வரக்கூடிய 30ம் தேதி நடைபெறுள்ளது.
இங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று பாஜக காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தெலுங்கானா மாநிலத்தில் பாஜக சார்பாக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா என கட்சியின் முக்கிய புள்ளிகள் தெலங்கானாவில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் பாரத பிரதமர் மோடி நேற்று பிரச்சாரத்தை முடித்து கொண்டு ஆந்திராவில் உள்ள திருப்பது திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க இருந்தார்.
நேற்று மாலை விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் திருப்பதிக்கு வருவதால் விமான நிலையத்தில் இருந்து கோவில் வரை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை திருப்பதிக்கு வந்த பிரதமர் விஐபி வரிசையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பிரதமர் திருப்பதிக்கு வந்ததால் விஐபி தரிசனம் இன்று ஒரு நாள் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இன்று காலை தரிசனம் செய்து விட்டு, "140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்துகொண்டதாக" பிரதமர் பதிவிட்டுள்ளார். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மலை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.