மேயர் பிரியா செய்த காரியம்தான் தற்போது சென்னை மக்களை கோபப்படுத்தியுள்ளது.கடந்த வாரத்தில் சென்னையில் இதுவரை 27 வருடங்களில் நடக்காத ஒரு எதிர்பாராத சம்பவமாக ஜூன் மாதத்தில் மழை பெய்தது அதுவும் 200 வருடங்களில் இல்லாத கனமழை சென்னையில் பெய்ததாகவும் செய்திகள் வெளியானது, வானிலை ஆய்வு மையமும் இதனை உறுதிப்படுத்தியது. புவியின் மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக வடபழனி, திருவெற்றியூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் இரவில் பிடித்த மழை தொடர்ந்து பெய்ததால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. இப்பகுதிகளைத் தொடர்ந்து மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையங்களில் தகவல் வெளியானது. இருப்பினும் சென்னையில் மட்டும் 163% அதிக மழை பதிவானதாக கூறப்பட்டது. கன மழை பெய்ததால் ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் மிகப்பெரிய மரம் ஒன்று விழுந்தது. மேலும் மழையால் வெல்லமும் ஏற்பட்டு கத்தி பாரா சுரங்க பாதை மூடப்பட்டது, வெள்ளம் சூழ்ந்ததால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது ஒருபுறம் இருக்க இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி தாமதம் காட்டுகிறது என பல இடங்களில் மக்கள் குறை கூறினார்கள், இந்தநிலையில் சென்னை மாநகராட்சியின் இளம் பெண் மேயர், முதல் தலித் பெண் மேயர், வடசென்னையை சேர்ந்த முதல் மேயர் என திமுக தரப்பால் பல அளவில் விளம்பரம் செய்யப்பட்ட மேயர் பிரியா பற்றிய சர்ச்சைகளும் எழுந்தது.
ஏற்கனவே மேயர் பிரியா அவ்வப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசும் சில வார்த்தைகள் பற்றிய சர்ச்சை, அமைச்சர் கே என் இவரை ஒருமையில் பேசினார் என்ற ஒரு சர்ச்சை, சேகர்பாவிற்கு இவர் குடை பிடித்த நிகழ்வு மற்றும் அமைச்சர் சேகர்பாபு தான் ஆர் பிரியாவை நேராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்தார் என்ற பேச்சும் ஏற்படுத்திய சர்ச்சை, இதற்குப் பிறகு சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்யும் முறை அவருடன் சென்ற மேயர் ப்ரியா முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கி சென்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்கள் சர்ச்சைகள் எல்லாம் ஒரு வழியாக அடங்கி இருக்கின்ற சமயத்தில் தற்போது எந்த ஒரு வருடத்திலும் அதாவது கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் மழை பெய்து உள்ளதாக சென்னைவாசிகள் அந்த மழையால் பெரும் சிரமம் அடைந்த நிலையில் மேலும் மேயர் ப்ரியாவை மையப்படுத்தி மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.
திடக்கழிவுகளை கையாளு முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்காக இத்தாலி மற்றும் ரோம் நகரங்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது, அதாவது அயல்நாட்டு பயணம் புறப்படும் போது எதுவும் செய்திகள் கொடுக்காத மேயர் பிரியா சென்னையில் இரவு முழுவதும் அதாவது சென்னையில் கனமழையின் காரணமாக மக்கள் அவஸ்தைப்பட்ட வேளையில் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
இதன் பின்னணியில் மேயர் எங்கே என எழுந்த கேள்விகள்தான் காரணம் என கூறப்பட்டது. இப்படி சென்னை மக்கள் மழை வெள்ள நீரால் அவதிப்படும் வேளையில் சென்னை மேயர் பிரியா வெளிநாடு பயணமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அவ்வப்போது சென்னையில் மழை ஏற்படும்போது எல்லாம் நாங்கள் அந்த திட்டம் வைத்துள்ளோம் இந்த திட்டம் வைத்துள்ளோம் என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறிக் கொண்டிருந்த தற்போது ப்ரியா, மக்கள் அவரின் உதவியை எதிர்பார்க்கும்போது வெளிநாடு சென்றுள்ளார் எனவும் இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர் எனவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் மழைநீரெல்லாம் வடிந்து சென்னை இயல்புநிலைக்கு வந்த பிறகு மேயர் பிரியா சென்னை வந்துள்ளார் எனவும் தற்போது சர்ச்சைகள் வெடித்துள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு மேயர் பிரியா இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.