24 special

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்....!தெறித்து ஓடிய அமைச்சர்...!

Mk stalin
Mk stalin

திமுக செய்த செயலால் பொதுமக்களிடம் சிக்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றததிலிருந்து டாஸ்மாக் மூலம் பெறப்படும் வருவாய் அதிகரித்தது மட்டுமில்லாமல் சர்ச்சைகளும் அதிகரித்தது. இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சராக அப்போது  செந்தில் பாலாஜி இருந்த பொழுது கூறியிருந்தார்.


அறிவித்திருந்தும் அதற்கான எந்த ஒரு செயல்பாடுகளும் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தது. அதற்கு மாறாக டாஸ்மார்க் மற்றும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவமே தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது, பிறகு அமலாக்கத் துறையும் சோதனையில் ஈடுபட்டது தற்போது விசாரணைக்காக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியிடமிருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை இரண்டுமே தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆக இருவரும் முறையே பிரித்தளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் முன்பு அறிவித்திருந்த 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற செய்தியை செயல்படுத்தும் பணியில் தற்போதய மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி இறங்கியுள்ளார். அதாவது ஜூன் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் செயல்படும் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று  திமுக அரசாணை வெளியிட்டது. இதன் படி சென்னை மண்டலத்தில் 138 மதுபான கடைகளும், கோவை மண்டலத்தில் 78 கடைகளும், மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 மதுபான கடைகளும் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அதனை பின்பற்றி தமிழகத்தில் சில கடைகளும் மூடப்பட்டது, குறைந்த வருவாய் உள்ள மதுபான கடைகள், பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மற்றும் கோவில் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கும் மதுபான கடைகளை மூடுவதாக குறிப்பிட்டு அது செயல்படுத்தப்பட்டது.

இதன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தனர், குறிப்பாக 2000 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டு அதனை மறைக்க 500 கடைகள் மூடப்படுகிறது என புதிய தமிழகம் கட்சி சார்பில் பகீரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே திமுக அரசின் மீது கொந்தளப்பில் உள்ள மக்கள் எப்பொழுது இடைஞ்சல் தரும் பல மதுபான கடைகளை மூட போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தாராபுரம் அருகே நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அமைச்சரை ரவுண்டுகட்டினர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் பகுதிக்கு அரசு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்தார். அப்போது டாஸ்மாக் கடைகளை மூட போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைச்சர் வருவதை அறிந்துகொண்டு அவர் கார் செல்வதை பார்த்து திடீரென காரை மறைத்து டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் எங்கள் குடும்பம் குடியால் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று வழி விடாமல் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் இது பற்றி விரைவில் எடுத்துரைப்பதாகவும் குடியால் தங்கள் குடும்பத்தில் என்னென்ன பாதிப்புகள் அடைகிறது என்பதை பட்டியலிட்டு தரவும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் எந்த மக்களை சமாதானப்படுத்தினர். அதற்குப் பிறகு மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவரது காருக்கு வழி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்பகுதியைப் போன்றே மற்ற அனைத்து பகுதிகளிலும் அதாவது தமிழ்நாடு முழுவதிலும் டாஸ்மார்க் கடைகளை மூடக்கோரியும் மறியலில் தமிழக பொதுமக்கள் ஈடுபட்டு வருவதாகவும் திமுக அமைச்சர்களுக்கு எதிராகவும் போராட்டத்தை ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி திமுக அரசு நல்ல பெயர் எடுக்கிறேன் என்ற நோக்கில் ஐநூறு கடைகளை மூடுவதாக அறிவித்து தற்போது தனக்கு எதிரான வினையை திமுகவை தேடிக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்..