24 special

சிக்க போகும் திமுகவின் அடுத்த முக்கிய புள்ளி...

ponmudi
ponmudi

தமிழகத்தில் கடந்த இரண்டு முறை அதிமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்பொழுது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று மூன்றாவது ஆண்டில் உள்ள நிலையில்,  திமுகவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் பாதி பேர் வழக்குகளில் சிக்கியும் சோதனைகளில் பிடிபட்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர். ஆரம்பத்தில் இந்த வரிசையை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொழுது செய்த முறைகேடு குறித்த புகாருக்காக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஐம்பதற்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையை நடத்தினர். 


இவர் அடுத்தபடியாக அமைச்சர் பொன்முடி 2006 - 2011 ஆண்டான திமுக ஆட்சிக்காலத்தில் அவரும் அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்களும் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண்ணை கடத்தி அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு செய்த வழக்கு தீவிரமடைந்து இதற்காக அமைச்சர் பொன்மொழி தொடர்புடைய இடங்களிலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு அடுத்ததாக திமுகவின் முக்கிய எம்எல்ஏவாக இருக்கும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாகத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .

இது போதாது என்று கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் எ வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக திமுகவின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சோதனைகளில் சிக்கி விசாரணைகளில் மாட்டி வருகின்றனர், இந்த நிலையில் எம் ஆர் கே பன்னீர் செல்வம் வேறு விரைவில் இந்த பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஐ பெரியசாமியை நோக்கி அம்பு ஒன்று பறந்துள்ளது. 

அதாவது 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பொங்கல் பரிசு பொருள்களில் பல்வேறு முறை கேடுகள் செய்திருப்பதாக கூறி திருவள்ளுரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பின் மீது மனு தாக்கல் செய்தார். ஆனால் லோக் ஆயுக்தா இந்த வழக்கு தள்ளுபடி செய்தது. இதனால் தரமற்ற பொருட்களை வழங்கியதாக முதல்வரிடமும் இது குறித்த புகார் அளிக்கப்பட்டுள்ளது இருப்பினும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத காரணத்தினால் தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகளும் அவற்றை தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பொங்கல் பரிசு பொருள்களில் தரமற்ற பொருட்களை வழங்கி முறைகேடு செய்தது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ பெரியசாமி ஆகியோருக்கு எதிராக பதியப்பட்ட புகாரை தள்ளுபடி செய்த லோக் ஆயுக்தாவின் உத்தரவை ரத்து செய்து இந்த புகார் குறித்து மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் விசாரணைகளும் இந்த முறைகேடு வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்டால் அது ஐ பெரியசாமிக்கு எதிராக திரும்பினால் அவரும் தண்டனை பெற்று சிறைக்கு செல்வது நிச்சயம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து திமுகவின் மூத்த தலைவர்கள் சிக்குவதால் அறிவாலயம் கலக்கத்தில் உள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.