பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் மூத்த பத்திரிகையாளர் கோலாஹலாஸ் ஸ்ரீநிவாஸ் உடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் அதில் அவர் எழுப்பிய ஊடகங்கள் பற்றிய கேள்விக்கு பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.
கோலாஹலாஸ் ஶ்ரீநிவாஸ் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை நோக்கி தமிழகத்தில் பாஜகவுக்கும் ஊடகங்களுக்கும் இடையே உறவு சுமூகமாகவே இருப்பதில்லையே ஏன் என கேள்வி எழுப்பினார் அதற்கு பேராசிரியர் ஸ்ரீநிவாசன் பதில்: கேரளாவில் எங்கள் ஆர்.எஸ்.எஸ் ஹரி ஏட்டன் ஜி சொல்லுவார், “The wolrd belongs to those who work” என்று. யார் வேலை செய்கிறார்களோ அவர்கள் பின்னே உலகம் செல்லும். தமிழ்நாட்டு மீடியாவை கைக்குள் வைத்திருக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு சிலர் வேலை செய்திருக்கிறார்கள். திராவிடர்கள், முற்போக்குகள், கம்யூனிஸ்ட்டுகள், ரேடிக்கல்ஸ் .இம்மாதிரியான கட்டமைப்புக்குள் தேசிய சிந்தனை உள்ளவர்களை நுழைய விட மாட்டார்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்.
கோலாஹலாஸ் ஶ்ரீநிவாஸ் கேள்வி: அதே போல நீங்களும் பண்ண வேண்டியது தானே? பேராசிரியர் ஸ்ரீநிவாசன் பதில்: அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை மோடி அரசாங்கம் திறம்பட செய்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் தாண்டி மக்கள் செய்ய வேண்டிய பணியை அவர்கள் செய்ய வேண்டும். இன்னும் 10 வருடங்களில் தமிழக நிலை நிச்சயம் மாறும்.
கோலாஹலாஸ் ஶ்ரீநிவாஸ் கேள்வி: இந்த ஈக்கோசிஸ்டம் மாறும் என்கிறீர்கள்? பேராசிரியர் ஸ்ரீநிவாசன் பதில்: நிச்சயமாக. இந்த மாதிரி ஈக்கோசிஸ்ட்டம் மத்தியில் தான் ஒரு கோலாஹல ஶ்ரீநிவாஸ் இருக்கிறார். ஒரு ரங்கராஜ் பாண்டே இருக்கிறார். அவர்கள் மீது எவ்வளவு அவதூறு வீசுகிறார்கள் என்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த திராவிட அமைப்பில், ஒருவர் வைக்கும் வாதத்தை வைத்து பேச மாட்டார்கள். வாதம் வைப்பவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் - ஜாதி மதம் எனச் சொல்லி. சங்கி மங்கி என்பான். வாதத்துக்கு பதில் சொல்ல மாட்டான்.
இதெல்லாம் மாறும், மக்கள் புரிந்து கொள்வார்கள். இதைவிட பல மடங்கு ஊடக பலமுள்ள இடங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லிப் போவதே சரியானதாக இருக்கும். ஊடகங்களிலும் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை நிச்சயம் மாறும். கோலாஹலாஸ் ஶ்ரீநிவாஸ்: தமிழ்நாட்டில் இருப்பது போலத்தான் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இருந்தது - ஆங்கில மீடியாக்கள் உட்பட. அந்த நிலை இப்போது 90% மாறியுள்ளது.
ஒரு சிலர் மட்டுமே இன்னும் மாறாமல் இருக்கிறார்கள். அவர்களும் மாறுவார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம். பேராசிரியர் ஸ்ரீநிவாசன்: நிச்சயமாக என அந்த வீடியோவில் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது
( தொகுப்பு -செல்வ நாயகம் )
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.