Tamilnadu

"கிண்டலை பார்த்தீர்களா" ? கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமைச்சர் நேரு கொடுத்த "குசும்பு" ரிப்ளை!

Nehru
Nehru

தமிழக அமைச்சர் கே.என்.நேருவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்த சூழலில் அதற்கு அமைச்சர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து குறிப்பிட்ட வார்த்தைகள் "கிண்டலுக்கு" உள்ளாகியுள்ளன.


மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நேரு, "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்.

வெங்கடேசன்னு என்று ஒருத்தன் இருக்கான் அவன்கிட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிற .." என்று ஒருமையில் பேசி பதிலளித்தார்.  மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது அமைச்சர் நேருவை கண்டித்து மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதற்கு அமைச்சர் நேரு தனது ட்விட்டர் பக்கத்தில்,  பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

அதாவது அமைச்சர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை மாறாக இருவருக்கும் மனம் வருத்தப்பட்டு இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்,( பதிவை நன்றாக வாசித்தால் புரியும் )  இதை இப்போது மேற்கோள் காட்டி பலரும் கம்யூனிஸ்ட் கட்சியை கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

More news from Tnnews24