தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என்று சொன்னால் மோடியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும் என்று தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க .துணை பொது செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.இது பெரும் விவிவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவே மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற நிலை தான் இங்கு உள்ளது இதில் தமிழகம் வரி கொடுக்க மாட்டோம் னு எப்படி சொல்லமுடியும்.
வந்தே பாரத் ரயில் தயாரிப்பை சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனத்துக்குதான் மத்திய அரசு வழங்கியுள்ளது. அது தமிழகத்துக்கு கொடுத்ததாக கணக்கில்லையா? ரூ.1,260 கோடியில் சென்னையின் புதிய விமான முனையம், 170 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில், ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை, ரூ.3 ஆயிரம் கோடியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்களை மத்திய அரசுதான் செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மானியமாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆணைய பரிந்துரை இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு திட்டத்தின்கீழ் 50 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப செலுத்தும் வகையில் ரூ.6,412 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகதிற்கு 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் கிடைத்ததைவிட பல மடங்கு அதிகம் இப்போது பாஜக ஆட்சியில் கிடைத்துள்ளது. இதே போல் 2014-ம் ஆண்டு வரை திமுக கூட்டணி அங்கம் வகித்த மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த நிதி விவரங்களை திமுக சொல்ல தயங்குவதேன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே போல் தமிழ்நாட்டிலேயே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அந்த நிதியைத்தானே மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு வழங்குகிறது. இதைத்தானே மத்திய அரசும் செய்கிறது தமிழ்நாட்டின் "மேற்கு மாவட்டங்கள் கொடுக்கும் நிதியை, மற்ற மாவட்டங்களுக்கு செலவிடுவது நியாயமா?" என்ற கேள்வியை ஏற்கனவே தமிழக பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார். இது மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது. இதனால் தன் கண்ணை தானே குத்துவது போல் கனிமொழி தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என பேசியது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அதிக நிதி கொடுக்கும் மாவட்டங்களில் வரும் நிதியை அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே திமுக அரசு செயல்படுத்தவேண்டும். அதிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு எந்த நிதியும் செலவிடகூடாது அந்தந்த மாவட்டங்களில் வரும் வருவாயை வைத்து தான் அந்த மாவட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டும். என கோரிக்கை எழுந்தால் என்ன செய்யமுடியும்.
திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என திமுக கூறமுடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனியும் பிரிவினைவாதம் பேசினால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்கள் வழங்கும் வரிகள் குறித்து பேசப்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்