24 special

ஜாபர் சாதிக் வழக்கில் மீண்டும் விசாரணையில் மாட்டிய இயக்குனர் அமீர்!! ஜாபர் சாதிக் மனைவியும் விவகாரமும் வந்தது...

jaffer sadiq
jaffer sadiq

சமீபத்தில் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது போதைப் பொருள் கடத்தல் தான்!! இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்து தொடர்ந்து பல விசாரணைகள் நடத்திய பிறகு தற்பொழுது டெல்லியில் உள்ள திஹார் ஜெயிலில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தற்பொழுது அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ரூபாய் இரண்டாயிரம் கோடி அளவிற்கும் மேலாக போதை பொருள்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக் திமுகவின் முன்னாள் நிர்வாகி என்பது குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. 


இதனைத் தொடர்ந்து அவர் சாதிக்கு கூட்டாளிகளான மூன்று பேரை கைது செய்து தற்பொழுது மத்திய  போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் நான்கு பேர் மீது சட்ட விரோதமாக பணம் கடத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் திரைப்பட இயக்குனரான அமீர் ஆகியோர் ஜாபர் சாதிக்கு உடன் நட்புடன் இருந்ததாகவும், ஜாபர் சாதிக் கைது செய்ததை தொடர்ந்து அமீர் வீடு மற்றும் அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலும் பரிசோதனை நடத்தி வந்ததாக கூறப்பட்ட நிலையில் பல ஆவணங்களையும், கோடிக்கணக்கில் பணத்தையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியது. 

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் மனைவியான அமீனா பானு என்பவர் மீது சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு ஜாபர் சாதிக் மனைவி வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் இதுபோன்ற செய்திக்கு தற்பொழுது இயக்குனர் அமீர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள பதிவில்..

மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!! சட்ட விரோதமாக போதை பொருள்கள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் அவர்களின் மனைவியான அமீனா வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இந்த தகவல் அமலாக்க துறையிடமிருந்து வெளிவந்ததாக சில பிரபலமான செய்தி நிறுவனங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தி முற்றிலும் உண்மையானது கிடையாது என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார். 

மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களே இதுபோன்று பொய்யான செய்திகளை வெறும் தலைப்பு செய்திகளுக்காக பரப்பி வருவது மக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்புகளையும், நம்பகத் தன்மையையும் இழக்கும் விதத்தில் இருப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கின் ஆரம்பத்திலிருந்து என் சி பி மற்றும் அமலாக்க துறை விசாரணைக்கு அழைக்கும் பொழுது தனது முழு ஒத்துழைப்பையும் அழைத்து வருவதாகவும், இப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைதள ஊடகங்களும் தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது என்றும், ஆதாரம் மற்ற எந்த ஒரு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மறுபுறம் இதுகுறித்து விசாரிக்கும் போது பல தகவல்கள் கிடைத்தன, அதாவது அமலாக்கத்துறை எதையும் ஆதாரம் இல்லாமல் கூறாது, இவர் வழக்கில் அமலாக்கத்துறை நிச்சயம் எதாவது ஆதாரத்துடன் கண்டுபிடித்திருக்கும் அதனாலேயே இப்படி தகவலை வெளியிடுகிறார்கள்... அமீர் விவகாரம் நாளுக்குநாள் செல்ல செல்ல இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என கூறுகின்றனர்...