![Surya, Karthik](https://www.tnnews24air.com/storage/gallery/DVtPSU5X1cfHQqcN6NCqTp6o73vk1ri9MUil1ZkU.jpg)
தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். இவருக்கு இரண்டு மகனார் உள்ளனர் ஒருவர் சூர்யா ஏற்கனவே இவர் சினிமாவில் அவமானப்பட்டு தற்போது நடிப்பின் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இளைய மகன் கார்த்திக் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு இருந்த கார்த்திக் சினிமா மீது ஆசையில் இயக்குனராக ஆவதாரம் எடுக்க தன் தந்தையிடம் கூறினார். அதற்கு சிவகுமார் நீ முதலில் நடிக்க கற்றுகொள் அதன் பிறகு படத்தை இயக்கு என சொல்ல இயக்குனர் அமீரிடம் கார்த்திக் அறிமுக படுத்தினார்.
பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் கார்த்திக். இயக்குனர் அமீர் அப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை பார்த்த எல்லோரும் மனதிலும் எழுந்த கேள்வி ‘முதல் படத்திலேயே கார்த்தியை அமீர் எப்படி இப்படி நடிக்க வைத்தார்’ என்பதுதான். இந்த படத்தின் மூலம் நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால், இப்படத்தில் அமீருக்கு நேர்ந்த பிரச்சனைதான் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. பருத்திவீரன் தொடங்கப்பட்ட சில நாட்களில் அப்படத்திற்கு தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா படம் எடுத்து கொண்டிருக்கும் பாதியிலேயே வெளியேறினார். ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்திற்கு உறவினரும் கூட எதற்காக விலகினார் என கேள்வி எழுந்தது. படத்தை பாதியில் நிறுத்தாமல் அமீர் தனக்கு தெரிந்த உறவினர் மற்றும் நண்பர்களிடம் குறிப்பிட்ட தொகை கடன் வாங்கி அப்படத்தை முடித்தார்.
படம் முடிந்து நன்றாக உருவானதால் தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரை அழைத்து பேசி அப்படத்தை ஞானவேல் ராஜா பெயருக்கு மாற்றினார்கள். அதோடு, அவர் செலவு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு. ஆனால், அவர் பொய் கணக்கு எழுதி திருடினார் என்கிற ரீதியில் ஞானவேல் ராஜா பேசியது இயக்குனர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், ஞானவேல் ராஜாவிற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் மெட்டும் அந்த படத்தில் நடித்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை சிவக்குமாரோ, கார்த்தியோ, சூர்யாவோ எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் பலரும் இதுபற்றி விமர்சித்தும் இதுவரை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதது போல சூர்யா பேசியிருப்பதுதான் மீண்டும் பலரையும் கோபமடைய வைத்திருக்கிறது.
இது குறித்து சூர்யா பேசியது " பல வருஷம் கழிச்சி பருத்தி வீரன் படத்தை பார்த்து கார்த்தியை கட்டிப்பிடித்து அழுதேன். கார்த்தி ரொம்ப வசதியா, சொகுசா வளர்ந்த பையன். ஆனால், ஷுட்டிங் ஸ்பாட்ல அத்தனை அவமானங்கள், அசிங்கங்களை சமாளிச்சு 2 வருஷம் பல்லை கடித்துக்கொண்டு வலியும், வேதனையுமா வேலை பார்த்திருக்கான். அவனை கட்டிபிடிச்சு அழுவதை தவிர வேற எதுவும் என்னால வேற எதுவும் பண்ண முடியல’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அமீர் தான் அடைந்த அவமானம், நஷ்டம் பற்றியெல்லாம் பேசியபோது அதை பற்றி பேசாத சூர்யா, தனது தம்பி அவமானத்தை சந்தித்துக்கொண்டே பருத்திவீரன் படத்தில் நடித்தார் என்பதை எதை வைத்து சொன்னார் என யாருக்கும் புரியாதா புதிராக உள்ளது.