Cinema

விஜய் கட்சியின் பெயர் மாற்றம்...? ஆரம்பமே நல்லா இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Vijay
Vijay

தந்தை மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஜய், ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த விஜய் தனது தந்தை இயக்குனர் என்பதால் அவரே சில படங்களை இயக்கி வெற்றி பெற வைத்து சினிமாவில் வளர்த்து விட்டவர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் படம் ஒவொரு ஆண்டும் வெள்ளித்திரைக்கு வரும்பொழுது அரசியல் காரணத்தால் தடை ஏற்பட்டு சிக்கல் கொடுத்து வந்தனர். இதனால் அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் கடந்த சில மாதங்களாக விஜய் அரசியல் வரப்போகிறார் என்ற பேச்சு தொடங்கியது. அதன்படி விஜயும் கடந்த 2ம் தேதி தனது கட்சியின் அதிகார்பூர்வ பெயரை அறிவித்தார். இப்போது அந்த கட்சியின் பெயரை மாற்றுவதாக சில தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்திருந்தார். விஜயும் தனது அரசியல் கட்சியாக 'தமிழக வெற்றி கழகம்' என அறிவித்தார். விஜய் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது. எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. இவ்வாறு விஜய் ஒரு நீளமான அறிக்கையை வெளியிட்டார். 

அப்போதே பலரும் வாழ்த்து தெரிவித்தபோது, பாஜகவில் இருந்து விலகிய எஸ்.வி.சேகர் முதல் விமர்சனத்தை விஜய் மீது வைத்தார். அதாவது, அதாவது வெற்றிக் கழகமா, வெற்றி கழகமா என கேட்டு வந்தார். அவரை தொடர்ந்து விஜய்யின் கட்சி பெயரை ஆங்கிலத்தில் கூறும்போது TVK என்பது ஏற்கெனவே உள்ள கட்சியை விஜய் யோசிக்காமல் வைத்து விட்டாரா என ட்ரோல் செய்து வந்தனர். ஒருபக்கம் ஆங்கில பெயர் சர்ச்சையாக மாரு பக்கம் கட்சியின் பெயரில் வெற்றி கழகத்தின் இடையே "க்" என்பதை சேர்க்க வேண்டும் என தமிழறிஞர்கள் கூறி வந்தனர்.  இயக்குனர் அமீர், விஜய் கட்சி பெயரில் எழுத்துப்பிழை இருந்தால் கூட பரவாயில்லை. அவரது கட்சியின் பெயரில் இலக்கண பிழை இருக்கிறது. தமிழகமா தமிழ்நாடா?  தமிழ்நாடு என்று உச்சரிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அமீர் தெரிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து, சினிமாவில் உள்ள பிரபலங்கள் மற்றும் தமிழ் வல்லுநர்கள் விமர்சனம் வைத்து வந்த நிலையில், விஜய் தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் உள்ள எழுத்துப்பிழையை திருத்த முடிவெடுத்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. எழுத்துப்பிழை உள்ளதை விஜய்யும் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகின்றன. இதை கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே விஜய்க்கு தெரியாத அவர்களுக்கு ஆலோசனை கொடுப்பவர்கள் சரியானவர்கள் யாரும் இல்லையா என கேள்வி எழுப்பி, ஒரே மாதத்திற்குள் விஜய் கட்சி பெயரை மாற்றுவதும் கட்சி தொடங்கியதும் இரண்டு ஆண்டு விடுமுறை விடுவதும் விஜய்க்கு தான் பெருமை சேரும் விமர்சனம் வைத்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ஒரே வேலையாக கட்சி பெயரை மாற்றி விடுங்கள் அடுத்ததாக ஆங்கிலத்தில் உள்ள பெயருக்கு திமுக தரப்பில் இருந்து தமிழ்நாடு தன்னுரிமை கழக கட்சி தலைவர் வேல்முருகன் பிரச்சனை செய்து விடப்போகிறார் என அட்வைஸும் கொடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.