24 special

ஆளுநர் ஆர் என் ரவி கமிஸ்னரையே கூப்பிட்டு எழுப்பிய கேள்வி..! மிரளும் முதல்வர் ஸ்டாலின்..!

Rn ravi , mkstalin
Rn ravi , mkstalin

தமிழக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தமிழக அரசு எளிதில் கடந்து செல்ல நினைத்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் கனவிலும் எதிர்பாரத சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார் ஆளுநர். அதிலும் கமிஸ்னரை கூப்பிட்டு ஆளுநர் எழுப்பிய கேள்விதான் ஆளும் கட்சியை அதிர செய்து இருக்கிறது.


அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ஆளுநர் மாளிகை வாசலில் கேட் நம்பர் 1 எதிரே பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்க தமிழ்நாடு முழுவதும் பரபரப்பானது. ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இது ஒரு அசாதாரண சூழலை உண்டு பண்ணுவதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது இது தமிழக காவல்துறையின் தோல்வியாக பார்க்கபட்டது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தமிழ்நாடு ஆளுநரின் டெபுடி செகரட்டரி செங்கோட்டையன் சார்பில் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் மூன்று பக்க புகார் கொடுக்கப்பட்டது. ஆளுநர் மீது கடந்த காலங்களில் வார்த்தை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநர் மீது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 2022 ஏப்ரல் மாதம் ஆளுநர் தர்மபுரம் ஆதீனத்துக்கு செல்லும்போது கற்களால் கம்புகளாலும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரை காவல்துறை வழக்காக பதிவு செய்யவில்லை,

இந்த நிலையில் 25ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது ஆளுநர் தனது அரசியல் சாசன கடமையை ஆற்ற விடாமல் அவரை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் ஆகும். இப்படிப்பட்ட தொடர் அச்சுறுத்தலான சூழ்நிலையில் ஆளுநர் தமிழ்நாட்டில் பணியாற்ற முடியாது. இந்த புகார்களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ’என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் போலீஸ் உயரதிகாரிகளோடும் சீனியர் அமைச்சர்களுடன் ஆலோசித்தார். அதன் அடிப்படையில் காலை 10:30 மணிக்கு சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்தார், அப்போது கருக்கா வினோத் என்கிற அந்த ரவுடியின் பின்னணி பற்றியும் அவருக்கு பின்னால் எந்த அமைப்புகளும் இல்லை, அவர் ஒரு தனி நபர் என்றும் ஆளுநரிடம் விளக்கி இருக்கிறார்.

ஆனால் ஆளுநர் இந்த கதை விடும் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம் நான் உளவுத்துறையில் பணியாற்றியவன் எனக்கு தெரியாதா?, ’நாங்கள் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் நீங்களே புகார் வாங்கி வழக்கு பதிவு செய்து உள்ளீர்களே?’ என்று சற்று கடுமையாக கேட்டு இருக்கிறார். இதன் பிறகு ஆளுநரிடம் விளக்கம் அளித்துவிட்டு புறப்பட்டார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்.

இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் 26 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில். ’ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரை வாங்காமல் போலீசார் இந்த வழக்கை நீர்த்துப்போக செய்கிறார்கள். இந்த விசாரணை ஆரம்பமாக முன்பே கொல்லப்படுகிறது’ என்ற ரீதியில் கடுமையான அரசியல் தொனியில் இருந்தது.இது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஆளுநர் மாளிகை பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்திய முதல்வர், இந்த விவகாரத்தை சட்டரீதியாக எப்படி எல்லாம் எதிர் கொள்ளலாம் என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசித்துள்ளார்.

இந்த நிலையில்தான் இன்று மாலை சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்ட செய்தியில், ’ தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை தற்போது ஜாமினில் எடுத்ததே பாஜக வழக்கறிஞர்தான். பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி சிறையில் இருந்த நபரை பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு போலீஸ் இந்த விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

சட்டதுறை அமைச்சர் பேச்சை திமுக ஆதரவு ஊடகங்கள் பெரிய அளவில் எடுத்து செல்ல அடுத்த சில நிமிடங்களில் பாஜக கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த நபர் திமுகவை சேர்ந்தவர் என்றும் அது தொடர்பான ஆதாரங்களை தமிழக பாஜகவின் அதிகார பூர்வ பக்கங்களில் வெளியிட்டது.

இந்த நிலையில் ஆளுநர் மீண்டும் DGP யை தொடர்புகொண்டு இதற்கு முன்னர் ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் நிலை என்ன என கேட்டதுடன் நீங்கள் மாநில அரசின் பணியாளரா இல்லை மக்கள் பணியாளரா எனவும் அழுத்தமாக கேட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் ஆளுநர் தனக்கு உள்ள ஸ்பெஷல் அதிகாரத்தை பயன்படுத்த இருப்பதாக சூசகமாக கூறி இருக்கிறாராம்.

பாஜக மீது வழக்கம் போல் பழியை போட்டு திசை திருப்பி அரசியல் செய்யலாம் என நினைத்த திமுகவிற்கு ஆளுநர் முன்னாள் IPS அதிகாரி என்பதும் உளவு துறையில் பணியாற்றிவர் என்பதாலும்  ஆதாரங்களை கைவசம் வைத்து இருக்கிறாராம். ஆளுநர் மாளிகையில் வீசப்பட்ட குண்டு என்பது ஆளுநரை நோக்கி நடத்தப்பட்ட கொலை முயற்சியாக மாற்றப்படும் பட்சத்தில் தமிழக அரசின் நிலை ஆட்டம் காணும் என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.

நேற்று இரவே முழுமையான விளக்கத்தை ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய கையோடு சென்னை வந்து இருக்கும் குடியரசு தலைவரிடமும் கொடுத்து இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலனா அமைச்சரவை ஆட்டம் கண்டு இருக்கிறதாம்.