24 special

ஆரம்பித்து வைத்த உதயநிதி...! உத்திரபிரதேசத்தில் முடித்துக்காட்டப்போகும் யோகி ஆதித்யநாத்...!

udhayanithi , yogi adityanath
udhayanithi , yogi adityanath

தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கையை பற்றி அவதூறாக பேசி வட மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் சனாதனத்தை போற்றும் தமிழர்களிடமிருந்து  கடுமையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டார். 


உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு அனைத்து  மாநிலங்களிலும் கிளர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு கட்சிகளிடம் இருந்து சனாதனம் குறித்த விவாதங்களும் பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, இது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினே ஏன் சனாதனத்தை பற்றி நாம் பேசினோம் என்று நினைக்கும் அளவிற்கு அவரை சமூக வலைதளங்களில் அனைவரும் விமர்சனம் செய்யும் வகையில் அமைந்தது அவருடைய பேச்சு.

மேலும் அனைத்து கட்சிகளிடமிருந்து உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல கண்டனங்கள் எழுந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை வைத்த சம்பவங்களும் நடைபெற்றன, மேலும் I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் திமுகவை கூட்டணி கட்சியில் இருந்து விலக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஈடுபட்டதால் திமுகவிற்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டது. 

மறுபுறம் கட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை சனாதனம் குறித்து நான் பேசுவதை நிறுத்த மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் பிடிவாதம் ஆக இருந்ததால் அவருடைய குடும்பத்திலிருந்து  இனிமேல் சமாதானம் குறித்து யாரும் வாய் திறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இந்த விவகாரத்தை கையில் வைத்துக்கொண்டு உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் இருந்து வாக்குகளை குவிப்பதற்கு பல பிரச்சாரங்களை வியூகங்களை வகுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோரக்கூர் ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது மேலும் அந்த விழாவில் ஒன்பதாவது நாளான சாரத்திய பூஜையில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத் பூஜை நிறைவு பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத்  'நாளை விஜயதசமி  இந்த நாளில் உண்மை நீதி நேர்மை ஆகியவை வெற்றி பெற்ற நாளாக கருதப்படுகிறது மேலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும்  தீய சக்தி நம்மை ஆட்கொள்ளும் போது அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு சனாதன தர்மம் உதவியாக இருக்கிறது என்றும் சனாதன தர்மம் தான் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கிறது' என்று சனாதனத்தை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இதற்கு முன்னதாக கோரக்பூர் ஆலயத்தில் கன்னியா பூஜையில் கலந்து கொண்டு சனாதன தர்மத்தை போற்றும் வகையில்  கன்னிப் பெண்களின் பாதங்களை கழுவி பாத பூஜை செய்ததுடன் பூஜையில் கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு ஆரத்தி எடுத்து உணவுகளை வழங்கினார். 

அதற்கு பின்னர் கன்னி பெண்களுக்கு தட்சணை கொடுத்து பரிசு பொருட்களை வழங்கியதுடன் கால பைரவரை பூஜை செய்து வழிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இவ்வாறு சனாதான தர்மத்தை வைத்தே உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் இது கண்டிப்பாக சனாதனத்தை எதிர்த்த திமுக அமைந்துள்ள I.N.D.I.A கூட்டணிக்கு எதிராக அமையும் எனவும், இதனால் வாக்குகள் பாஜகவிற்கு விழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சனாதன விவகாரத்தை வைத்தே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை  பாஜகவை வெற்றி பெற வைக்கிறேன் பாருங்கள் என யோகி ஆதித்யநாத் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் கண்டிப்பாக யோகி ஆதித்யநாத் இதை நடத்திக் காட்டுவார் என அடித்து கூறுகிறார்கள் பாஜக தரப்பினர்.