தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் நியமனம் என்பது 2014-ம் ஆண்டிற்கு முன்புவரை சம்பிரதாய நிகழ்வாக இருந்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டும் அதற்கு விதி விலக்கு இந்நிலையில் பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் கட்சியின் சீனியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளை மாநில ஆளுநராக நியமித்து மாற்றங்களை உண்டாக்கினார்.
அந்த வகையில் ஆர் என் ரானே நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்க பட்டார், ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவியை பொறுத்தவரை இன குழுக்களை கண்டறிதல், எல்லையில் வெளிநாட்டு சதி , வெளிநாட்டில் தொடர்புடைய NGO இயக்கங்களை கண்டறிதல், ஆயுத குழுக்களை அடையாளம் காணுதல் போன்ற துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர், அத்துடன் அஜித் தோவலின் தேசிய பாதுகாப்பு குழுவில் துணை ஆலோசகராகவும் செயல்பட்டவர்.
அந்த வகையில் தமிழகத்தில் மூன்று முக்கிய பொறுப்புகளை பிரதமர் மோடி ரவியிடம் ஒப்படைத்து இந்த பொறுப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது, ஒன்று கடந்த ஆண்டுகளில் அதிக தீவிரவாதிகள் கண்டறியப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது, கேரளா தமிழக எல்லையை ஒட்டிய மாநிலங்களில் தீவிரவாத இயக்கங்களின் ஆதரவாளர்கள் அதிகம் உருவாவதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு வில்சன் படுகொலை, மதுரையில் தீவிரவாத ஆதரவாளர்கள் கைது NIA ரிப்போர்ட் என பல தகவல்கள் உள்ளன.
சென்னையில் புதிதாக அமைந்துள்ள NIA அலுவலகத்துடன் நேரடியாக இணைத்து இந்த பணியை பார்வையிடவும், மதமாற்ற NGO க்கள் அதிகம் உள்ள மாநிலமான தமிழகத்தில் அதன் வேறுகளை நேரடியாக கண்டறிந்து மத்திய அரசிற்கு 18 மாதங்களில் அறிக்கை அளிக்கவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் தேர்தல்கள் இல்லாத சூழலில் முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஒருவர், ஆயுத குழுக்கள் நிரம்பிய நாகலாந்து மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நியமிக்க பட்டிருக்கிறார் என்றால் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஏற்கனவே முன்னாள் IPS அதிகரியான அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்த நிலையில் தற்போது தமிழக ஆளுநராகவும் முன்னாள் IPS அதிகாரி ஒருவர் நியமிக்கபட்டு இருப்பது அரசியலும், பாதுகாப்பும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க எதிர்நோக்கியுள்ளது மத்திய அரசு.