24 special

வெளிய எடுப்பீங்களா...? மாட்டீங்களா..? புழல் சிறையில் இருந்து கேட்கும் புலம்பல் சத்தம்...!

Senthilbalaji
Senthilbalaji

அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய பொழுது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இவர் செய்த மோசடிக்கு தகுந்த ஆதாரங்களாக இருந்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்காக அமலாக்கத்துறை இவரை கைது செய்ய முற்பட்ட பொழுது ஏற்பட்ட விபரீதத்தின் முடிவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அதற்குப் பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து திறம்பட வாதிட்டு செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டாலும் இவர் தமிழக அமைச்சரவையில் ஒரு அங்கம் எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கப்படாமல் அவர் அமைச்சராக தொடர்வார் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்த அறிவிப்பு பல விவாதங்களுக்கு உள்ளானது. 

இருப்பினும் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படாமல் தற்போது வரை வேலை செய்யாமல் ஒரு அமைச்சர் அரசு ஊதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றால் அது தற்போது சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியே என அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வழக்குகளை முன்வைத்த அமலாக்க துறைக்கு சாதகமான தீர்ப்பு வெளிவந்தது அதாவது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று வெளிவந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது இந்த விசாரணையில் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவை அனைத்திற்கும் பதில் அளித்து தனது சகோதரர் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் தெரிவித்துள்ளார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விசாரணை காலத்திற்குப் பிறகு அமலாக்கத்துறை சமர்ப்பிக்கப்பட்ட 3000 பக்க குற்ற பத்திரிகைகள் 250 கேள்விகள் என அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு தண்டனையை கொடுக்கும் என்று மூத்த வழக்கறிஞர்களால் கூறப்பட்டது. 

இதற்குப் பிறகு திமுக அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல பிரச்சனைகள் எழுந்த காரணத்தினால் சமீப காலமாக செந்தில் பாலாஜியை திமுக கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இனிமேல் செந்தில் பாலாஜி காப்பாற்றுவது ஒரு முடியாத காரியம் அதனால் அவர் அப்படியே இருக்கட்டும் என்று அறிவாலயம் நினைத்து இப்படி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் விமர்சகர்களால் பேசப்பட்டது. 

பிறகு செந்தில் பாலாஜி வழக்கை சென்னை எம் பி, எம் எல் ஏக்கள் மீதான விசாரணையை மேற்கொள்கின்ற சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதோடு விசாரணை முடிந்த பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது இந்த நீதிமன்ற காவலில் இருப்பதற்கான காலத்தை இன்னும் அதிகரித்துள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்றத்தின் காவலில் தான் இருக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக தரப்பு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்பதை நிரூபிக்கவே முன்பு போராடியது, இதன் காரணமாகத்தான் செந்தில் பாலாஜி இவ்வளவு காலம் ஜெயிலில் இருக்கிறார் ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டால் தான் ஜாமீன் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய முடியும், ஆனால் ஜாமீன் கேட்காமல் திமுகவினர் இவரை ஜெயிலில் வைத்திருப்பதால், கடந்த சில வாரங்களாக ஜெயிலில் இருந்து புலம்பல் சத்தம் அதிகரித்துள்ளது அதாவது வெளியே எடுப்பார்களா மாட்டார்களா என்று செந்தில் பாலாஜி தரப்பு புலம்பலில் இருந்து வருவதாக சிறை வட்டாரங்களின் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.