காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சம்பத் மித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது “எல்லா திருடர்களுக்கும் மோடியின் குடும்பப் பெயர் வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்”. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பின்பு குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி என்பவர் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவதூறாக பேசியுள்ளார் என்று சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்திரவிட்டார். இதன்காரணமாக அவருடைய வயநாடு எம்பி பதவி காலியனதாக அறிவித்து, ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து உத்திரவிட்டது மக்களவை செயலகம். இதனால் ராகுல் இனிவரும் 8 ஆண்டுகளுக்கு தேர்தலி போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்”.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு ஜாமினும் வழங்கியது. மேலும் இந்த தண்டனை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கியது.
இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யவுள்ளார். மேலும் காந்தி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சூரத் நீதிமன்றம் செல்கிறார்கள். இதனை பாஜக முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளரும், தற்போது சுற்றுலாத் துறையின் தலைவருமான சம்பித் பத்ரா, காங்கிரஸ் கட்சியினரையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதில் “காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவதற்காகவே ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சூரத் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதித்துறைக்கு அழுத்தம் ஏற்படுத்தவே இதுபோன்று செய்கிறார்கள். ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விரும்பினால் பரவாயில்லை, ஆனால் ஏன் வலிமையை காட்ட வேண்டும்?. நீதிமன்றத்தில் சலசலப்பை உருவாக்குவதே காங்கிரஸ்
கட்சிகளின் நோக்கம் என்றார்”.
“காந்தி குடும்பத்தை சார்ந்த அனைவரும் சூரத் நீதிமன்றம் செல்கிறார்கள். ஒரு வக்கீல் செய்ய வேண்டிய ஒன்றுக்கு இவ்வளவு நபர்கள் கோர்ட்க்கு செல்கிறார்கள். அதற்கு என்ன தேவை?
இந்திய நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்களா??
நீங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்???” என்று கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒட்டுமோத்த மோடி சமூகத்தையும் அவதூறாக பேசியுள்ளார். ‘முதலில் ராகுல் காந்தி ஓபிசி சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காதது ராகுல் காந்தியின் திமிர்’ என சம்பத் மித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.