ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள சில அரசியல்வாதிகள் பிரதமர் மோடி பேசிய பேச்சால் தற்போது பீதியில் உள்ளனர்.தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது, குறிப்பாக மோசடி வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு, பணப்பரிமாற்ற வழக்கு இது போன்ற பல வழக்குகள் முக்கிய மாநில கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மீது விசாரணையில் இருந்து வருகிறது.
அதில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த தலைவர்கள் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால் 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, ஜகத் ரட்சகன், செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடியின் மகன், தயாநிதி இன்னும் பலர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இது ஒருபுறம் இரால் ஆ. ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 15 பேரை 2 ஜி வழக்கில் இருந்து குற்றம் செய்ததற்கான ஆதாரங்களை சிபிஐ முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று கூறி டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது "கடந்த 2018ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கியது.
சிபிஐ தரப்பு வாதம் கடந்த 2020 ஜனவரி 15ஆம் தேதியன்று நிறைவடைந்தது. எதிர் தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது இன்றுவரை ஏதாவது ஒரு காரணங்களை கூறி வழக்கு தள்ளி போகிறது எனவே வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
அதிலும் குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடத்த முடியவில்லையெனில் சிறப்பு அமர்வை நியமித்து தினசரி விசாரணை நடத்தலாம்," என்று சிறப்பு வழக்காக எடுக்கக்கோரி வேண்டுகோள் வைக்கப்பட்டது ஏன் என்றால் சிபிஐ வசம் இப்போது ஆதாரங்கள் வலுவாக இருப்பதன் காரணமாக உடனடியாக வழக்கு விசாரணயை துரித படுத்த சிபிஐ தரப்பு முயன்று வருகிறது.
இது ஒருபுறம் என்றால் பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறிய ஒரு விஷயம் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மத்திய புலனாய்வுப் அமைப்பான சிபிஐயின் வைர விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் .
"தொழில்முறையிலான திறமையான நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே சிபிஐக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது. திறமையின் மிகப்பெரிய எதிரி ஊழல். இதுவே குடும்ப அரசியல் வளர்வதற்குக் காரணம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு. ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது. இதுவே நாட்டு மக்களின் விருப்பம். பல பரிமாணங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பாக சிபிஐ உருவாகியுள்ளது' என பிரதமர் மோடி பேசினார்.
மேலும் பிரதமர் கூறிய முக்கியமான விஷயம்தான் சிலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 'கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது என குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி சிபிஐ அதிகாரிகளிடம் "நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள்.
அவர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்கள், இன்றும் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக்கூடாது" என்றும் சொன்னார்.
இப்படி பிரதமர் மோடி ஊழலை பற்றி பேசிய காரணத்தினால் ஏற்கனவே ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள பலரின் பயம் அதிகரித்துள்ளது, காரணம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்திலும் ஊழல் வழக்குகளில் வேகம் காட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெல்லியில் மணிஷ் சிசோடியா, கே சி ஆர் மகள் கவிதா போன்றோர்களின் வழக்கு அதி வேகத்தில் செல்கிறது. வழக்குகளில் வேகம் காண்பிக்கப்பட்டு சிறை வரை சென்றுள்ளனர்.
மணிஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கான ஆதாரத்தை சிபிஐ முறையாக வழங்கி இருக்கிறது, இதனால் நீதி மன்றமும் டில்லி துணை முதல்வராக இருந்த சிசோட்டியா ஜாமின் மனுவை குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக கூறி தள்ளுபடி செய்து விட்டது.
தமிழகத்தை பொறுத்த மட்டும் தற்பொழுது வழக்கு விசாரணையிலேயே இருந்து வருகிறது, இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை பிரதமர் மோடி கூறியது போல் வேகம் எடுக்கும் என்றும் வருகின்றன இரண்டு மூன்று மாதங்களில் சிறை கூட செல்ல நேரலாம் என்ற அச்சம் காரணமாக சில அரசியல்வாதிகள் இப்பொழுது பீதியில் உள்ளனராம்.
அதில் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு விரைவில் இறுதி விசாரணைக்கு வர இருப்பதாக வெளியான தகவல் இருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.