24 special

உனக்கு பிரதமர் ஆசை வந்துடுச்சா??? விலாசிய அமித் ஷா..!

Amitsha , nithiskumar
Amitsha , nithiskumar

நிதிஷ் குமாரின் பிரதமர் கனவு இனி ஒரு போதும் நடக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் உள்ள ஹிசுவா பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்ட்ரிய ஜனதா தளம், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இனி ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு வரவே முடியாது. ஏனெனில் நிதிஷ் குமார் பாஜகவில் சேறுவதற்கு இருந்த எல்லா கதவுகளையும் நாங்கள் அடைத்து விட்டோம்.


“பீகார் முதலமைச்சராக உள்ள நிதிஷ் குமார் பிரதமராக ஆசை படுகிறார். அவருடைய பிரதமர் கனவு ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் பிரதமர் பதவி தற்போது காலியாக இல்லை. நிதிஷ் குமார் அவர்களுக்கு இந்திய பிரதமராகும் ஆசை இருக்கிறது. இன்னொரு புரம் அந்த கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏ தேஜஸ்வி யாதவிற்கு பீகார் முதல்வராகும் ஆசையும் உள்ளது”.

ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த லாலு பிரசாத் யாதவுக்கும், முதல்வர் நிதிஷ் குமார் யாதவிற்கும் பல்வேறு கருத்து வேறுபாடு இருக்கிறது.  ‘பீகார் மாநிலத்தில் இருக்கும் 40 தொகுதிகளும் மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள்’. 

மேலும்  “பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவுடன் அதிகாரத்திற்காக கைக்கோர்த்து உள்ளார். தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை நீ ஒரு பச்சோந்தி, துரோகி, பாம்பு என மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டிருந்தார். ஆனால் தற்பொழுது மாநிலத்தில் அதிகாரத்திற்காக நிதிஷ் குமாரை மறந்துவிட்டார். நாங்கள் பீகார் மாநில மக்களிடம் சேர்ந்து அங்கு இருக்கும் கூட்டணி கட்சியை தோற்கடிப்போம்”.

“பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக, பிரதமர் ஆக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். பீகார் மாநிலத்தில் இனவதாம் நடத்தும், நிதிஷ் குமாருடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்”.