
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக் கூடிய சூழலில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது
பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, ‘‘மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன’’ என்று கூறியிருந்தார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருந்தே சொல்லி கொண்டுதான் இருக்கிறார்களே ஆதாரத்தை கொடுக்கவில்லை.
தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக, ஓட்டுக்கள் திருடப்படுகிறது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அதுமட்டுமின்றி, அவர் மஹாராஷ்டிராவை போல் பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடப்பதாக பலமுறை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
1. தேர்தல் கமிஷன் ராகுலுக்கு ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
2. தேர்தல் கமிஷன் ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்காது ஏன்?
3. எந்தவொரு பிரச்னை குறித்தும் அவர் தேர்தல் கமிஷனுக்கு ஏன் எந்த கடிதமும் அனுப்பவில்லை.
4. அவர் போலி குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் விசித்திரமானது, மேலும் இப்போது தேர்தல் கமிஷனையும், அதில் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளார். இது வருந்தத்தக்கது.
5. தேர்தல் கமிஷன் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை (போலி குற்றச்சாட்டுகள்) புறக்கணித்து விட்டு, தேர்தல் கமிஷனில் பணியாற்றும் அனைவரும் பாரபட்சமின்றி வெளிப்படையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில், வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டு உள்ளது.மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமுறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிகார் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு திருத்தம் சரியானதுதான் என்றும், இதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வாக்காளர் உரிமை பெற்றவர், இந்தியக் குடிமகனா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தானே? அதற்காக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நியாயமானதே என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.மேலு ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கும் விரைவில் வர இருப்பதால் தான் இந்த கதறல் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.