24 special

பிரதமர் அருகில் இருக்கும் பொழுதே முகத்தை மூடிய ராமர் கோவில் சாமியார்....! என்ன மர்மம்!

modi, ramar temple
modi, ramar temple

கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று இதுவரை இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கான ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட்டது. முதல் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 8000 துறவிகள் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் மிக முக்கிய தலைகள் என பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அவர்கள் சென்றதுடன் சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மன்னர் குடும்ப தம்பதிகள் அயோத்தி ராமர் கோவிலுக்குள் அழைக்கப்பட்டதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் அவர்கள் அமர்த்தப்பட்டு ராமர் கோவிலின் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வைக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் பெருமையாக பார்க்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு முன்பாக பிரதமர் கிட்டத்தட்ட 11 நாட்கள் விரதம் இருந்து ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வந்தார் கடைசியாக திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வந்ததும் ராமேஸ்வரத்திலிருந்து புனித தீர்த்தங்களில் பிரதமர் நீராடியதும் தனுஷ்கோடிக்கு சென்று ராம் சேது பாலத்தை நோக்கி மலர்களை தூவி வணங்கியதும் சமூக வலைதளம் முழுவதும் வைரலானது.


இதனை அடுத்து ஜனவரி 22 ஆம் தேதி காலை முதலே அயோத்தி ராமர் கோவில் குறித்த வரலாறு மற்றும் எப்படி அயோத்தி ராமர் கோவில் உருவானது என்பது குறித்த தேடல்கள் அதிகமானது! ஏனென்றால் கிட்டத்தட்ட 1500 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்து கோவிலின் மீது கட்டுப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்குப் பிறகு உச்சநீதிமன்றம் கடந்த 2019 அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம் என்றும் மசூதி கட்டுவதற்கு அயோதியிலேயே வேறு பகுதியில் ஐந்து ஏக்க நிலம் வழங்கப்பட்டு கட்டமைக்கப்படும் என்றும் உத்தரவிட்டது. இப்படி பல சட்ட போராட்டங்களை  சந்தித்து வந்த ராமர் கோவில் பிரம்மாண்டமாக தற்போது திறக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதோடு அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் வேளையில் ராமர் கோவில் கிட்டதட்ட 3 தளங்களில் கட்டப்பட்ட உள்ளதாகவும் இக்கோவிலின் கட்டுமான பணிகளில் சிமெண்ட் மற்றும் இரும்பு எங்குமே பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதோடு அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு உலகின் பல பகுதிகளில் இருந்து பல பரிசு பொருட்கள் மற்றும் காணிக்கைகள் அயோத்தி ராமருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கோவில் திறப்பிற்கு பிறகு ஒவ்வொரு நாளும் ராமரை காண்பதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிற நிலையில், கும்பாபிஷேகத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கருவறையில் பிரதமருக்கு அருகில் நின்ற ஊடுப்பியின் தேஜாவர் மடா தேச சுவாமி விஸ்வ பிரசன்னதீர்த்தர் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தன் முகத்தை மூடிக்கொண்டார். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து எதற்காக முகத்தை மூடிக்கொண்டு உள்ளார் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது! அதோடு இதற்கு என்ன காரணம் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது வீடியோவில் விஸ்வ பிரசன்ன தீர்த்தர் தன் முகத்தை மூடிக்கொண்ட சமயத்தில் சுவாமிக்கு நெய்வேத்தியம் வழங்கப்பட்டதாகவும் நெய்வேத்தியம் வழங்கும்பொழுது கடவுளை வந்து அந்த உணவை உண்பார் என்பது நம்பிக்கை அதனால் அந்த சமயத்தில் நாம் நம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கத்தை அனைவரும் செய்தால் நல்லது என்றும் விஷ்வ பிரசன்ன தீர்த்தர் அவர்களே ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளார்.