சினிமாவிலும் நாடகத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ராதிகா சரத்குமார் இணையத்தில் போட்ட ஒரு பதிவு தான் ரசிகர்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது. அந்த பதிவில் இப்படி ஒரு அருவருக்க தக்க ஒரு படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை என்று சமூக வலைத்தளமான ட்வீட்டரில் பதிவிட்டதற்கு ரசிகர்கள் சிலர் நீங்கள் அந்த படத்தை தான் நினைத்து பதிவிட்டு உள்ளீர்கள் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றார்கள். இந்த பதிவு இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல அவார்டுகளை வாங்கி குவித்த ராதிகா இன்றும் தனது நடிப்பு மூலம் மிளிரி வருகிறார். இதுவரை இணையத்தில் முகம் காட்டாத நடிகை ராதிகா கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, 'எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது' என குறிப்பிட்டுள்ளார்'. நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பதிவு போட்ட சில மணி நேரத்தில் இணையவாசிகள் சிலர் பட பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும், அனிமல் படமே அதிகமாக பதிவிட்டுள்ளனர். நடிகை ராதிகா நாகரிகம் கருதி படத்தின் பெயரை தவிர்த்துள்ளனர்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி திம்ரி, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “அனிமல்”. இந்த படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. ரூ.900 கோடி வரை வசூலித்த இந்த படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட், ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் அந்த படத்தை எல்லாம் பார்க்கவே மாட்டேன் என்றும் ஹீரோயினை ஷூவை நக்க சொல்வது, ஆல்ஃபா மேல் கொடுமைகள் என படம் முழுக்க ஆபாசமும் ஆணாதிக்கமும் நிறைந்திருப்பது மோசமான விஷயம் என வெளுத்திருந்தார்.
சமீபத்தில் வெளியானது இரண்டே படம் தான் சலார் மற்றும் அனிமல் படம் மட்டுமே ஒடிடி தளத்தில் வெளியானது இதில் எதாவது ஒரு படத்தை தான் ராதிகா சொல்கிறார் என ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலங்கள் பலரும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தனர். அனிமல் படத்தில் சில காட்சிகள் அருவருக்க தக்கது குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் என படம் வெளியான போதே சில கருத்துக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.