மிகவும் பிரம்மாண்டமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமான ஒரு கோலத்தில் நேற்று அயோத்தி ராமர் கோவில் காட்சியளித்தது அதைவிட பிரம்மாண்டமாக அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் வண்ண மலர்கள் மற்றும் தங்கத்தால் ஜோடித்ததும் பார்போர் கண்ணை கவர வைத்தது. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக காத்திருந்த காத்திருப்பிற்கு ஒரு பலன் தற்பொழுது கிடைத்துள்ளது பல போராட்டங்கள் பல வழக்குகள் மற்றும் பல உயிர்களைத் தாண்டி அயோத்தியில் ராமர் கோவில் நிறுவப்பட்டிருப்பது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அயோத்தியில் ராமருக்காக கோவில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததை அனைத்து விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட ராமர் கோவில் எந்த ஒரு நிலையிலும் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று தற்போது கும்பாபிஷேக விழாவுடன் நிறைவு பெற்றிருப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்துவரும் பாஜக அரசும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அரசியல் வட்டாரத் தரப்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, உத்திரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், உத்திர பிரதேச முதல்வர் துணை முதல்வர், ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கார், ஆர்எஸ்எஸ் சர்சங்க சாலக் மோகன் பாகவத், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோரும் சினிமா நட்சத்திரங்கள் வட்டாரத்தில் அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், கங்கன ரணாவத், ஹேமமாலினி, ரன்பீர் கபூர், அலியா பட், சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் பாரதி மெட்டல் போன்ற தொழிலதிபர்களும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு ராமரை தரிசித்து சென்றனர்.
இந்த நிலையில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு முன்பாக சில அதிசய அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இரண்டு பகுதிகளில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சில தொழிலாளிகள், அவர்களில் ஒரு தொழிலாளி பத்திரிகையாளர் முன்னிலையில் நடந்த அதிசயத்தை தெரிவித்துள்ளார், அவர் கூறும்போது முதலில் சிறிய சிறிய கற்கள் மட்டுமே நாங்கள் சமன்படுத்தும் பகுதியில் இருந்தது, அதனை அகற்றிக்கொண்டு வந்தும் திடீரென்று ஒரு பெரிய கல் கிடைத்தது அதனை மூன்றாக வெட்டி நாங்கள் ஓரமாக எடுத்து வைத்திருந்தோம். அதற்குப் பிறகு அயோத்தில இருந்து எங்களுக்கு தகவல் வந்தது அதாவது அயோத்தியில் ராமரின் சிலையை வடிப்பதற்கான கற்கள் சென்னை நேபாளம் ராஜஸ்தான் போன்ற பல பகுதிகளில் இருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகிறது நாமும் கற்களை அனுப்பி வைப்போம் என்று என் மேல் அதிகாரி என்னிடம் கூறினார் இதை எடுத்து நான் அந்த கல்லை பத்திரமாக வைத்திருந்தேன் அதற்கு பிறகு அவர்களை வந்து இதனை பார்த்துச் சென்றார்கள் பார்த்த பிறகு கல்லின் தரம் மற்றும் நிறம் அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் ராமரை வடிப்பதற்கு இது போன்ற கற்கள் கிடைப்பது இல்லை, இது போன்ற கல் கிடைத்திருப்பது நமது புண்ணியம் என்று கூறியுள்ளார்.
மேலும் அயோத்தி ராமர் கோவிலுக்காக ஐந்து கற்களையும் அனுப்பியுள்ளோம் ராமர் சிலை வடிப்பதற்காக ஒன்பது அடியில் 8 இன்சில் கல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் கேட்ட அனைத்து கற்களையும் நான் அயோத்திக்கு அனுப்பி விட்டேன். அங்கு அவர்கள் பரிசோதித்து பார்த்ததில் நாங்கள் அனுப்பிய கற்கள் 85 சதவிகிதம் தரம் வாய்ந்ததாக இருந்தது மற்ற கற்களைக் காட்டிலும் இந்த கற்களை அதிக தரமுடையதாக உள்ளதாக கூறி அயோத்தியில் இருந்து குருக்கள் வந்து மேலும் இரண்டு கற்களை கேட்டு வாங்கியும் சென்றார் என்று தெரிவித்துள்ளார் அந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர்! இதுமட்டுமில்லாமல் இந்த கற்கள் ராமருக்காக காத்திருந்த கல் அதனாலதான் இந்த கல்லில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.