பல வருடங்களாக ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலானது பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் வரலாற்று நிகழ்வை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிகள் அயோத்திக்கு வந்திருந்தனர். இப்படி நாட்டின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் ஒட்டு மொத்த நாடும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா குறித்த செய்திகளும் தகவல்களும் இடதுசாரிகளுக்கு இடைஞ்சலாகவே இருந்துள்ளது. மேலும் இந்த கும்பாபிஷேகம் இடதுசாரிகளுக்கு பெரும் எரிச்சல் ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், இதே விவகாரத்தை கையில் எடுத்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு தான் அரசியல் பேசியது மட்டுமின்றி நடிகை கீர்த்தி பாண்டியனையும் சேர்த்து பேச வைத்துள்ளார். ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன் மேடையில் பேசும் பொழுது, இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் பெயரை கூற ஆரம்பித்தாலே அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களா என்று வருகிறது, அப்படி பேசினால் என்ன தப்பு! இந்த கேள்வியை கேட்கும் அவர்கள் அனைவருமே தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி அது, நாம் அணிந்து கொண்டிருக்கும் உடையிலிருந்து குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது.
அதைப்பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் கிடையாது அதைப்பற்றி பேசுவதற்கு நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதே அர்த்தம்! இந்தப் படத்தில் அரசியல் இருக்கிறது நாம் நடிக்கும் எல்லா படத்திலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது, அதிலும் ரஞ்சித் அவர்கள் தான் எடுக்கும் படத்தில் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அப்படி அந்த படத்தில் எனக்கு எனது குரலை பயன்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார்.இறுதியாக காலு மேல காலப்போடு இராவண குலமே என்ற இந்த படத்தில் வரும் பாடலை பாடிவிட்டு தன் இருக்கைக்கு சென்றார்.இவரைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் பேசும் பொழுது, மேடையில் பேசிய கீர்த்தி பாண்டியனை பாராட்டி விட்டு!
இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் வேற அது இல்லாம நம்ம வீட்ல இன்னைக்கு கற்பூரம் கொலுதாட்டி நாம் அனைவரும் தீவிரவாதிகள் தான் அந்த அளவிற்கு தற்பொழுது பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது நாடு! மிகவும் தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது நமக்கு தெரியாது இந்தியா இன்னம் பத்தாண்டுகளில் எவ்வளவு மோசமான நாட்டில் நாம் இருக்கப் போகிறோம் என்று, அதை குறித்த பயத்தை இது உணர்த்தும் என்று நான் நினைக்கிறேன்,. அவ்வளவு பயமான ஒரு காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னாடி நமக்குள் இருக்கும் மதவாதத்தையும் பிற்போக்கு வாதத்தையும் அழிப்பதற்கான ஒரு கருவியாக கலை உருவெடுத்து வருகிறது என்று மறைமுகமாக பாஜகவை எதிர்க்கும் வகையிலான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இப்படி பா.ரஞ்சித் தொடர்ந்து தனது படத்தின் மூலம் இடதுசாரியாக வலம் வந்து கொண்டிருக்கிற நிலையில் தற்போது நடிகையை கீர்த்தி பாண்டியனையும் இதில் இழுத்துவிட்டு இருப்பது... வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு இதெல்லாம் தேவையா ஏன் இப்படி பேச வேண்டும் ரஞ்சித் அவர் பேசியது மட்டுமல்லாமல் நடிகையையும் சிக்க வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.