இலங்கையில் உள்நாட்டு போருக்குப் பின்னர், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் நடைபெற்றது. உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி முன்னதாக நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழக ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்கத்தின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டி திருகோணமலையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ் நடிகை கலந்துகொண்டு அமைச்சர் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் சமீபத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் பலரும் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார்கள். தமிழகர்களின் கலை கலாச்சார பண்பாட்டுடன் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்றனர். இதில் சினிமாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யாதத்தா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூட மேல கூட வைத்து பாடலை பாடிய பின் இங்கு உள்ள நபரை நான் சென்னைக்கு அளித்து செல்லலாம் என ஆசையாக உள்ளது என பேசியது கூட்டத்தில் வியக்க வைத்துள்ளது. பொங்கல் விழாவிற்கு தன்னை அழைக்கும் போது அமைச்சர் என்று சொன்னதும் வயதானவர் என்று நினைத்தேன் ஆனால் இங்கு வந்து பார்த்த போது, செம்ம ஸ்மார்ட்டகா அழகாக இருக்கிறார் எனவும் இதுபோல் அமைச்சர் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் புகழாரம் சூட்டினார். இந்த மாதிரி ஒரு இளமையான அமைச்சர் எங்களுடைய ஊரில் இல்லையே…ஜீவன் கண்டிப்பாக நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நான் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற உதவிகளை மேலும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பாராட்டி பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தமிழ்நாட்டில் விஜயகாந்த் மறைந்தது தொடர்பான கெளசிகள் செய்தியாளர்கள் கேட்ட பொழுது தான் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்துள்ளேன் அது சம்பந்தமாக மற்றும் பேசுங்கள் என கை எடுத்து கும்பிட்டிர்கள். இப்போது அங்கு பொங்கல் விழாவிற்கு தானே போனீர்கள் அதை மட்டும் பார்க்க வேண்டும் எதற்காக அமைச்சர் அப்படி இருக்கிறார் இப்படி இருக்கிறார் என்று அவரை புகழ்ந்து பேசுகிறீர்கள். அப்போ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்களை வயதானவர்கள் என்று நீங்கள் சொல்ல வாரீங்களா..? தமிழ்நாட்டில் உங்களை திமுக கண்டு கொள்ளவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்களுடன் வந்த மற்ற நடிகைகள் இப்படி ஏதும் பேசவில்லையே நீங்கள் பேச என்ன காரணம் என்று பதிவிட்டு வருகின்றனர்.மற்றொரு தரப்பு தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும் இளைஞர் தானே அவர் தங்கள் கண்ணனுக்கு தெரியவில்லை என உதயநிதியை சீண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.