இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்பொழுது உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரவேற்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட மூன்று தலங்களைக் கொண்ட இந்த ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இந்த நிலையில் ராமர் கோவிலின் திறப்பு விழாவும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக தேதி குறிக்கப்பட்டு கட்டிடங்கள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் பல ராம பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலை நோக்கி தற்போது படை எடுத்து வருகின்றனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக வெளியான தகவல் தற்போது உறுதியாகி உள்ளது. மேலும் இதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினத்திலிருந்து விரதத்தை மேற்கொண்டு புனித நீராடி அதற்குப் பிறகு ராமரை பிரதிஷ்டை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கு 11 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் விடப்பட்டுள்ளதாக ராமர் கோவிலின் அறக்கட்டளை சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டால் மட்டுமே நாங்கள் காலணி அணிவோம் என ஒரு தரப்பினர் பல வருடங்களாக மேற்கொண்டு வந்த சபதத்தை தற்பொழுது முடிவு செய்ய உள்ளனர் மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு வருமானவரித்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தற்போது 64 வயதில் பாதயாத்திரை மேற்கொண்டு ராமருக்கு தங்கப் பாதுகையை செலுத்த சென்று கொண்டிருக்கிறார். அதுவும் ராமர் ராமேஸ்வரத்திற்கு அயோத்தியில் இருந்து சென்ற பாதையை ஆய்வு செய்து கண்டறிந்து அந்த வழியிலே தற்பொழுது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் இதுவும் சமூக வலைதளம் முழுவதும் வைரலானது. அதோடு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்லும் பணியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பாஜக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டதும் பயணத்திற்கு தேவையான முழு செலவையும் தமிழக பாஜகவே ஏற்கும் என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கும்பாபிஷேக விழாவில் பயன்படுத்தப்படும் புனித நீர் நாட்டின் அனைத்து புனித தலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் பல கோவில்கள் மூலம் ராமர் கோவிலின் அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி தமிழக பாஜக தலைமையில் பல முக்கிய அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று அயோத்தி ராமர் கோவிலில் புகைப்படம், அழைப்பிதழ் மற்றும் அர்ச்சதைகளும் வழங்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரையில் பாஜக மூத்த நிர்வாகியான பேராசிரியர் ராம சீனிவாசன் மதுரையின் மிக முக்கிய ஜமாத்திற்கு சென்று ராமரின் புகைப்படம், அர்ச்சனை செய்யப்பட்ட பொருகள் மற்றும் அழைப்பிதழை வழங்கியுள்ளார், ஜமாத்தை சேர்ந்தவரிகளும் அப்பொருள்களை நமாஸ் செய்து வாங்கி உள்ளனர். இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் அறிவாலய தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இஸ்லாமியர்கள் திமுக பக்கம் என திமுகவினர் கூறிவந்த நிலையில் தற்போது இஸ்லாமியர்கள் ராமர் கோவிலின் அழைப்பிதழை பாஜகவிடமிருந்து பெற்றுக் கொண்டது அறிவாலயத் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இது துவக்கம்தான் போகப்போக பாருங்கள் என கமலாலய தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.