Cinema

நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்து ..? வெளியான அதிர்ச்சி தகவல்!

Nayanthara
Nayanthara

நடிகை நயன்தாரா கேரளாவில் பிறந்து தமிழ் சினிமா மூலம் திரைதுறைக்கு அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் படத்தில் இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருந்ததால் இணையத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டது. தொடந்து தோல்வி படமாக அமைந்த நயன்தாராவுக்கு தற்போது திருமண வாழ்க்கையிலும் தோல்வி அமையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நயந்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் பாலிவுட்டிலும் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் ஜவான் படம் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து இறைவன், அன்னபூரணி என தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகின. இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தற்போது நயன்தாரா மீது விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, அன்னபூரணி பட சர்ச்சை மட்டும் கலைஞர் 100 விழாவில் கலந்துகொண்டது சர்ச்சையாக மாறியது. இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் நயந்தாராவின் திருமண வாழ்கை முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரபல ஜோதிடர். முன்னதாக ஜோதிடர் அரசியலில் உள்ள அமைச்சர்கள் ஊழல் செய்து சிறைக்கு போவதாக பல ஜோதிடர் கணித்து சொல்லி வந்த நிலையில் இப்போது அப்படியே மாறியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி சிக்கியுள்ளனர் இதில் இருந்து மீண்டு வரமுடியாது என ஜோதிடர்கள் கணித்து சொன்னார்கள் அதே போன்று பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை மற்றும் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் எனவும் கூறிவந்தனர். மேலும், 2024ல் இலங்கை அழியக்கூடும் வேண்டும் ஜோதிடர்கள் காணாது வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா ககுறித்து ஜோதிடர் தெளிவுபடுத்தியுள்ளார்.  

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வருங்காலத்தில் பிரிய வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கணித்த நிலையில், அதேபோல இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிய வாய்ப்புள்ளதாக வேணுசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்து அறிந்த ரசிகர்கள் அந்த ஜோதிடரின் வீடியோ கீழ் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் பிரபுதேவா, சிம்பு உள்ளிட்டோர் சாபம் சும்மா விடுமா என மாறாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.