24 special

தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கும் விஜயகாந்த்...வெளியான முக்கிய தகவல்!

annamalai, premaladha vijayakanth
annamalai, premaladha vijayakanth

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் தனித்து இருக்கும் கட்சிகள் கூட்டணிக்காக பல கட்சிகளிடம் கதவை திறக்க முயன்று வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணாமலையை சந்திக்க முடிவு எடுத்துள்ளார்.நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்ததும் அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர். அதன் பின் அவரின் உடல்நல பிரச்சனை காரணமாக கட்சியின் செல்வாக்கு குறைய தொடங்கியது. 2019ம் ஆண்டு பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்தபோது தேமுதிகவும் அவருடன் கூட்டணியில் இருந்தது.


அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு தேமுதிக தோற்றது. அதன் பின் 2021ம் ஆண்டு அதிமுகாவுடனான தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகியது.இதையடுத்து, பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாப்பை இழந்தது. தற்போது அந்த கட்சியின் அங்கீகாரத்தை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது. இதற்காக யாருடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை தொடரலாம் என்று ஆலோசித்து திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்ற திமுகவின் கதவுகளை தட்டப்பட்டது.

அதற்கு ஆளும்கட்சி கண்டுகொள்ளாமல் விட்டது. இதனால் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் பிரச்சசினையை கருத்தில் கொண்டு அவருடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து அதிமுகவும் பாஜகவும் தனித்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்திருந்தது.

இதனால் பாஜக கூட்டணியியல் அதிமுக இடத்தை நாம் எடுத்து கொண்டு வெற்றி பெற செய்து மீண்டும் பிரதமராக மோடியை முடி சூட்டலாம் என்று தேமுதிக கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பொருளாளர் பிரேமலதா பாஜக கூட்டணியில் இணையலாம் என்று திட்டமிட்டுள்ளதாம். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து உறுதிப்படுத்த முயன்று வருவதாக தகவல் வந்துள்ளது.  

தமிழக முழுவதும் பாஜக தலைவர் அண்ணமாலை என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு சேர்த்து வருகிறார். மாவட்ட வாரியாக அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நடைப்பயணத்தின் முடிவானது அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரம் சென்னையில் மிக பிரமாண்டமாக நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட டெல்லி தலைமை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். 

அந்த நிகழ்ச்சியின் போது தேமுதிக கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் தேமுதிக உள்ளத்தக்க கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் சேருவதற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தும், அதனை பொருட்படுத்தாமல் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் மக்களுக்கு என்ன நல்லது செய்திருக்கிறார்கள். என்ற கோணத்தில் ஆராய்ந்து ஊழலை மட்டுமே செய்துவருவதால் அவர்களுடன் கூட்டணி வேண்டாம். புதிய ஒரு கட்சியில் இணைந்து முடிவு எடுத்து தற்போது பாஜகவில் இணைய மும்முரமாக வேலைகள் செய்து வருவத்க்க அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.