இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காண்கிற இந்தியாவை சற்று பத்து வருடங்களுக்கு பின்னோக்கி சென்று பார்த்தாள் நாம் இன்று அனுபவிக்கும் பல வசதிகள் அன்று இருந்திருக்கிறதா என்று கேட்டால் அனைவருக்கும் தெரிந்ததுதான் இல்லை என்ற பதில்!! ஏனென்றால் அப்பொழுது கிராமப்புறங்களில் போதுமான கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் ரோடு வசதிகள் சில கிராமங்களில் இருந்தாலும் பல கிராமங்களில் இல்லாத நிலைமையை இருந்தது அதேபோன்று நகரமும் தாறுமாறான போக்குவரத்து நெரிசலோடு ஒரு மாசடைந்த சுற்றுச்சூழலை சந்தித்து இருந்தது. உலக அளவில் இந்தியாவும் வளர்ந்து கொண்டிருக்கின்ற நாடு என்ற பார்வையிலே இருந்து வந்தது வளர்ந்த நாடுகள் இந்தியாவின் மீது கண் வைத்ததும் இல்லை இந்தியாவில் ஒரு கருத்தை கேட்க வேண்டும் என்பதை யோசித்தும் பார்த்ததில்லை!!ஆனால் தற்போது இந்த நிலை முற்றிலும் தலைகீழாக மாறி உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்தியா என்ன கூறுகிறது எந்த நாட்டிற்கு இந்தியாவின் ஆதரவு உள்ளது என்பதை பிரச்சனைகள் இருக்கும் நாடுகள் கவனிக்கிறார்கள் இந்தியாவிடம் மிக முக்கியமான ஆலோசனைகளையும் கேட்கிறார்கள் அதேபோன்று நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நல்ல வளர்ச்சியையும் கண்டு வருகிறது போக்குவரத்து பக்கம் பார்க்கும் பொழுது உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது ரயில்வே சேவைகளும் அபரிவிதமான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
ஒவ்வொரு வீடு தோறும் குடிநீர், இலவச கேஸ் சிலிண்டர், கழிப்பறைகள் மற்றும் விவசாயிகளுக்கு வேண்டிய காப்பீடு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளி துறையில் இதுவரை எந்த உலக நாடும் சாதிக்காத ஒரு புதிய வெற்றியை இந்தியா கண்டது வளர்ந்த நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திருப்ப வைத்தது. அதோடு எப்படி டிஜிட்டல் இந்தியா சாத்தியமாகும்? சாதாரணமாக பெட்டிக்கடை வைத்திருப்பவர் பேங்க் அக்கௌன்ட் வைத்திருப்பாரா? அங்கு சென்று எப்படி டிஜிட்டல் முறையில் பேமென்ட் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியவர்கள் அனைவரும் தற்போது வாயடைத்து நிற்கும் வகையில் தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்களும் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களும் டிஜிட்டல் பேமென்ட் முறையை கையாண்டு வருகிறார்கள்.ஏனென்றால் வளர்ந்த நாடுகளில் இந்த டிஜிட்டல் முறையை என்றோ அமல்படுத்தி தற்போது செயல்படுத்திக் கொண்டு வருகிறது ஆனால் இருப்பினும் அந்த நாடுகளை விட குறுகிய காலத்தில் இந்தியாவில் டிஜிட்டல் முறை தொடங்கப்பட்டாலும் அதிக உச்சத்தை இந்தியா பெற்றுள்ளது என்பது உலக நாடுகளிடையே இந்தியாவை உயர்த்தி காண்பித்துள்ளது. இதற்கான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி திறம்பட கையாண்டு வந்துள்ளது என்பதை பல நாட்டு பிரதமர்களின் தொழிலதிபர்களும் பொருளாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நேஷனல் கிரஷ் ஆக விளங்குகின்ற தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ராஷ்மிகா மந்தனா பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து வியந்து பாராட்டி பேசியுள்ளார். அதாவது சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, நாட்டிலேயே மிக நீளமான கடல்வழிபாலமாக கருதப்படுகின்ற அடல் சேது பாலம் குறித்தும் அந்த பாலத்தால் இரண்டு மணி நேரம் பயணமானது 20 நிமிட பயணமாக மாறி உள்ளது இதை நாம் என்றாவது நினைத்து பார்த்திருக்கிறோமா கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை பாருங்கள் இந்த வளர்ச்சி இத்தோடு நின்று விடக்கூடாது இன்னும் தொடர வேண்டும் அதற்காக வாக்களியுங்கள் என பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து அவர் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.