Tamilnadu

நரசிம்மருக்காக நரசிம்மரை விட உக்கிர அவதாரம் எடுத்த பிரத்தியங்கிரா தேவி!

Narasimha
Narasimha

உக்கிரத்தின் உச்சிகள் இருந்த நரசிம்மரையே சாந்தி படுத்த அவதரித்த அவரைவிட மிகவும் உக்கிர வாய்ந்த அம்மனை பற்றிய கதை உங்களுக்கு தெரியுமா? அவள் உக்கிரத்தில் இருக்கும் பொழுது மனித ரூபத்தில் இருக்கும் யாராலும் பயப்படாமல் அவளது உருவத்தை காண முடியாது என்றும் கூறுகிறார்கள் அவள் தான் பிரத்தியங்கிரா தேவி! அதாவது தனது பக்தனான பிரகலானதனை கொடுமைப்படுத்தி வந்த இரண்யகசிபுனை அளிப்பதற்காக மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரம் எடுத்தார். மேலும் அந்த அரக்கனை கொல்வதற்காக நரசிம்மர் தனது மடியில் அவனைக் கிடத்தி தனது கூரிய நகங்களால் அவளது நெஞ்சை பிளந்து அவ்வாரக்கணின் ரத்தத்தை குடித்தார் ஏனென்றால் அந்த அரக்கனின் ரத்தம் பூமியில் விழுந்தால் அவன் மீண்டும் ரத்தத்தின் மூலம் உருவம் பெறுவான் என்பதற்காக, ஆனால் இரண்யகசிபுன் ரத்தத்தை குடித்த நரசிம்மருக்கு உக்கிரம் தலைக்கு மேலே ஏறி கண்ணில் பட்ட மற்றும் கையில் கிடைத்த அனைத்து பொருட்களையும் உயிர்களையும் அழித்தார்.


இதனால் தேவர்கள் விரைந்து சிவபெருமானிடம் வேண்டி விரைவில் நரசிம்மரை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையென்றால் உக்கரத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை அறியாமல் செய்து கொண்டிருக்கிறார் உலகமே அழிய நேரிடும் என வேண்டியதை அடுத்து சிவபெருமான் பறவை மிருகம் பூதம் என கலவையான உருவம் கொண்ட சரபம் என்ற உருவத்தை எடுத்தார். சிவபெருமானின் இந்த அவதாரத்தை சரபேஸ்வரர் என்று நாம் வழிபட்டு வருகின்றோம். மேலும் சரபம் உருவம் எடுத்த சிவபெருமான் நரசிம்மரை தாக்கிய பொழுது கோபம் கொண்ட நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற ஒரு சக்தி வடிவத்தை வெளிப்படுத்தினார் இந்த சக்தியானது சரபம் என சிவபெருமான் எடுத்துள்ள பறவைக்கு எதிரியாகும். அதனால் சிவபெருமான் மிகுந்த உக்கிரத்தில் தன் மூன்றாவது கண்ணை திறக்கும் பொழுது பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

அவள், 2000 கண்களுடனும் 2000 கைகளுடனும் ஆயிரம் சிங்கமுகங்களுடனும் 10 யானையை விட பெரிய உருவத்திலும் அவதரித்து கண்ட பேருண்டம் என்ற சக்தியை தன் வாயில் போட்டு விளங்கினாள் அதனால் உக்கிரமாக இருந்த நரசிம்மர் சாந்தி அடைந்தார்.இப்படி நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க மிகவும் உக்கிரமாகவும் மற்றும் பார்ப்பதற்கே பயமுறுத்தக்கூடிய வகையிலும் அவதாரம் எடுத்த பிரத்தியங்கிரா தேவியை மனிதர்கள் பார்த்து பயப்படக்கூடாது என்பதற்காகவும் மிகவும் பிரம்மாண்ட உருவத்தை வழிபட முடியாது என்பதற்காகவும் தேவர்கள் பிரத்தியங்கிராதேவி இடம் வேண்டுதலை முன்வைக்க, சிங்க முகம் மற்றும் மனித உடலுடன் கூடிய எட்டு கரங்களுடன் அன்னை ரூபத்தில் காட்சி கொடுத்தாள் பிரத்தியங்கிரா தேவி! இப்படிப்பட்ட பிரத்தியங்கிரா தேவிக்கு பல இடங்களில் கோவில்களும் சன்னதிகளும் உள்ளது. அதில் ஓசூரில் உள்ள பிரத்தியங்கிரா தேவியின் ஆலயத்தில் தேவி பிரமாண்ட உருவத்தில் காட்சி கொடுத்து வருகிறாள்.

அதனால் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஓகே கிழமைகளிலும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் அங்கு சென்று மனதார பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு வந்தால் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகள் தடைகள் போன்றவற்றை நீக்கி எதிர்ப்புகள் இல்லாமலும் எதிரிகளை பலமிழக்க வைக்க பிரத்யங்கிரா தேவி அருள் புரிவாள் என கூறப்படுகிறது. ஓசூர் மட்டுமின்றி கும்பகோணம் அருகே அய்யாவாடி என்ற இடத்திலும், தூத்துக்குடி, சென்னை சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, சீர்காழி, வேலூர் மாவட்டம் பள்ளூர், கன்னியாகுமரி மாவட்டம் ஊழிக்கோடு ஆகிய இடங்களிலும் பிரத்தியங்கிரா தேவிக்கு கோவில் உள்ளதாக கூறப்படுகிறது.