24 special

'பாசக்கார நண்பா' விஜயகாந்த் வெற்றிக்கு பின்னால் ராவுத்தர்!

Vijyakanth, Ravuthar
Vijyakanth, Ravuthar

ஒவ்வொரு ஆணினின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது காலம் காலமாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜயகாந்த் வெற்றிக்கு முக்கிய காரணமே ஒரு ஆண் தான் அந்த நபரால் தான் இன்று கேப்டன், கருப்பு எம்ஜிஆர் மற்றும் மக்கள் இடத்தில் சாதிச்சார் என்பதற்கு எல்லாமே ராவுத்தர் இப்ராஹிம் என்ற ஒரு ஆண் மட்டுமே.


கேப்டன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நபர் விஜயகாந்த் இவர் நேற்று காலை உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்துவமான ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையில் இருந்து சினிமா கனவுகளோடு சென்னை புறப்பட்ட விஜயராஜ்ஜுக்கு உறுதுணையாகவும் முழு பலமாகவும் இருந்தவர் ஒரேயொருவர் தான். அவர்தான் விஜயராஜ் என்ற விஜயகாந்தின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். மதுரையை பூர்வீகமாக கொண்ட இருவருமே சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். 

இதனால் விஜயகாந்தின் சினிமா கனவு நனவாக வேண்டும் என்பதற்காக, அவருடன் சென்னை கிளம்பியவர் இப்ராஹிம் ராவுத்தர். பின்னாளில் விஜயகாந்த்தை டாப் ஹீரோவாக உச்சம் தொட வைத்ததுடன், அவரது நடிப்பில் பல படங்களையும் தயாரித்திருந்தார். ராவுத்தரின் கச்சிதமான வியாபாரக் கணிப்பு, ராவுத்தர் சொன்னால் சரியா இருக்கும் என மறு பேச்சில்லாமல் ஓக்கே சொல்வாராம் விஜயகாந்த். விஜயகாந்துக்கு கால் சீட் ஏற்படுத்தி கொடுப்பது, கதையை தேர்வு செய்து கொடுப்பது, சம்பளம் பேசுவது என அனைத்தும் இப்ராஹிம் ராவுத்தர் தான் விஜயகாந்துக்கு பக்க பலமாக செய்து வந்தாராம். ராவுத்தர் சொன்னால் மறு பேச்சு இல்லாமல் சரி என சொல்லி நடிப்பாராம். 

அந்த வகையில் புலன் விசாரணை படத்தில் விஜயகாந்துக்கும்  இயக்குனருக்கும் ஒத்து போகாமல் படம் தடை ஏற்பட்டதும் அந்த நேரத்தில் இயக்குனரையும், விஜயகாந்தும் அழைத்து சமரசம் செய்தார் ரவுத்தர். தன் நண்பனின் அடுத்த இலக்கு அரசியல் என்பதைக் கச்சிதமாகக் கணித்து அதனை வடிவமைத்ததும் இப்ராஹிம் ராவுத்தர் தானாம். அவரை அரசியல் தலைவராக அணு அணுவாக செதுக்கியதில் ராவுத்தருக்கு தான் முக்கியப் பங்கு உள்ளதும் அனைவரும் அறிந்ததே. கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்துக்கு வர காரணமாக இருந்த ராவுத்தர், அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றிவிட வேண்டும் என்பதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

விஜயகாந்துக்காக ராவுத்தர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் விஜயகாந்தை நடிகராக நடிக்க வைத்தவர் ராவுத்தர். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் ராவுத்தர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் 2015ம் ஆண்டு ராவுத்தர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சுய நினைவு இன்றி இருந்த போது விஜயகாந்த் சென்று பார்த்து கண்ணீர் வீட்டு அழுதார். ஒரு கட்டத்தில் ராவுத்தர் மறைந்த பின்னர் அவரது இல்லம் சென்ற விஜயகாந்த் சிறு குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி கண்ணீர் மல்க அழுதது பார்ப்பவர்களையும் கண் கலங்கச் செய்தது.