24 special

சாரி என்னை மன்னித்து விடுங்கள்...வருத்தம் தெரிவித்த அஜித்!

Vijayakanth, Ajith
Vijayakanth, Ajith

நடிகர் விஜயகாந்த் நேற்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணம் அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை முதலே திரையுலகில் உள்ளவர்கள் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்களும் ஆர்ப்பரித்து வந்து இரங்கல் தெரிவித்தனர்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் நேற்று இரவு ஹரதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த அவர் விமான மூலம் சென்னை வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அதன் பிறகு மக்களின் கூட்டம் அலைமோதியதால் தீவு திடலுக்கு உடலை மாற்றினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த ரஜினி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்திலேயே விஜயகாந்த் பற்றி சில வார்த்தைகள் பேசிய ரஜினி சென்னை தீவுத்திடலுக்கு நேரில் வந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின் விஜயகாந்துடன் தனக்கு நி்கழ்ந்த சில அனுபவங்களையும் பகி்ர்ந்து கொண்டார். அதே போல் நடிகர் கமல்ஹாசன் தேய்வு திடலுக்கு வண்டயது அஞ்சலி செலுத்தினர்.

இந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நேரில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அசர்பைசான் நாட்டில் இருக்கும் அஜித் பிரேமலதா மற்றும் அவரின் சகோதரர் சுதீப் ஆகியோருடன் தொலைப்பேசி வாயிலாக பேசி தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை திரும்பியதும் விரைவில் அவர் பிரேமலதாவை நேரில் சந்தித்து விஜயகாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரசியல் நகைச்சுவை நடிகர் வடிவேலு மட்டும் விஜயகாந்த் குறித்து எந்த வித பதிவும் தெரிவிக்கவில்லை இது விமர்சனமாக செல்கிறது.

தீவு திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கே அவருக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. அங்கும் மக்கள் ஆர்ப்பரித்து காத்து கொண்டு இருக்கின்றனர். மறைந்தும் அவரது பெயர் உலகமெங்கும் பரவி வருகிறது.