24 special

அய்யய்யோ...என்ன திருமா இதெல்லாம்? ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான நீங்க.. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இப்படி சவால் விடலாமா?

Thirumavalan
Thirumavalan

தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர் திருமாவளவன், இந்து கோவில்களை அசிங்கமான பொம்மைகள் இருக்கும் இடங்கள், என பேசியதில் இருந்து, கடவுள் ஐயப்பன் குறித்து பேசியதில் தொடங்கி திருமாவளவன் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ச்சியாக உருவாக்கி இருக்கிறார்.


இந்த சூழலில் திருமாவளவன் மீது பல்வேறு அமைப்புகள் புகார் கொடுத்தும் அதற்கான தீர்வு இதுவரை எங்கும் கிடைத்தது இல்லை, இந்த நிலையில் தற்போது இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் திருமாவளவன் பேசியதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன்,

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கத்தில் பிற கட்சிகள் செய்யாததை விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதித்துள்ளது என்று திருமாவளவன் சர்ச்சையாக பேசினார்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழிவழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாதான் மத்திய அரசு இருக்க வேண்டும்.  தமிழ் தேசியம் என்ற பேரில் பிற இனங்களின் மீது வெறுப்பை உமிழக்கூடாது.தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதுதான தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கத்தில் பிற கட்சிகள் செய்யாததை விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதித்துள்ளது என்று திருமாவளவன் பேசி இருந்தார்.

இது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது...ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போது நாட்டை பிரிக்கும் அளவிற்கு திருமாவளவனின் பேச்சு மாறி இருக்கிறது, முதலில் இந்து மதம் குறித்து பேசியவர், தற்போது தனி நாட்டில் வந்து இருக்கிறார், யாரெல்லாம் இந்து மதம் குறித்து பேசுகிறார்களோ அவர்களது கடைசி இலக்கு நாட்டின் ஒருமை பாட்டை சிதைப்பதாகதான் இருப்பதாக பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருவதுடன் திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் திருமாவளவன் கருத்தை கடுமையாக இந்து முன்னணி எதிர்த்து இருக்கிறது, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குறிப்பிட்டதாவது, அரசியல் சாசன சட்டத்தின் மீது பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட திருமாவளவன், இந்திய திருநாட்டின் இறையாண்மையை கேலி கூத்தாக்கும் வகையிலும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் நாட்டின் உன்னத தத்துவம் கொண்ட வாழ்வியலை அழித்து விடும் நோக்குடனும், தனி தமிழ்நாடு எனும் பிரிவினையை பேசி, இந்திய அரசியலமைப்பின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெறுப்பை உமிழ்ந்து உறுதி செய்துள்ளார்.

மத்திய அரசு சுதாரித்து, பிரிவினைவாத விதையை மக்களிடையே பரப்பும் திருமாவளவனின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும். கூட்டணி கட்சிளுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, இப்போதாவது விழித்துக்கொண்டு, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய நிலையில் தற்போது தனி நாடு கோரிக்கையை திருமாவளவன் எழுப்பி இருப்பதன் மூலம் நிச்சயம் அவர் எடுத்து கொண்ட பதவி பிராமணத்திற்கு எதிராக செயல்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது எனவும் நிச்சயம் திருமாவளவன் வரும் காலங்களில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது நிச்சயம் எனவும் அவர் கடந்த காலங்களில் தப்பியது போல் இந்த முறை தப்ப முடியாது எனவும் அவர் பேசியதற்கான முழுமையான ஆதாரம் இருக்கிறது நிச்சயம் திருமாவளவன் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என சட்டம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ இந்து மதத்தை விமர்சனம் செய்வதாக தொடங்கிய திருமாவளவன் இப்போது தனி நாடு கேட்கும் வரை செல்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால் நாட்டின் ஒருமை பாட்டிற்கே விட்ட சவால் என இந்தியாவிற்கு உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று கொடுத்த தியாகிகள் குடும்பத்தினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.