விரைவில் மீண்டும் மாறப்போகிறதா திமுக அமைச்சரவை திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றதில் இருந்து இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்துள்ளது ஆனால் இந்த முறை செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். புதிதாக சில அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதன்படி பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அடுத்ததாக திமுக பொருளாளராக உள்ள டி ஆர் பாலுவின் மகனும் மன்னார்குடியின் எம்எல்ஏ'வுமான டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே தற்போது டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்ற பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது
அமைச்சரவை மாற்றம் செய்த கையோடு முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார் அதற்கு முன்பாக நடத்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கோபப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளாக உள்ளவர்களுக்கு ஆசைகள் இருக்கலாம் அதே நேரத்தில் பதவியில் அவர்கள் வகிக்கும் பொறுப்பினை அறிந்து செயல்பட வேண்டும் என்றும், பொறுப்பில் உள்ளவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களின் பதவிக்கு எந்த ஒரு நிரந்தரமான உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கடிந்து கொண்டதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்ததாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 48 ஐஏஎஸ் அதிகாரிகளையும் இடமாற்றினார். மேலும் காவல்துறையினர்களையும் சில பணியிட மாற்றம் செய்தார்.
கட்சிதான் மிகவும் முக்கியம் கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கை நடந்தாலும் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க போவதில்லை என்றும் கூறியிருந்த முதல்வர் ஸ்டாலின் மீசா பாண்டியனை கட்சியிலிருந்து நீக்கினார். அவர் கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினாலேயே அவரை பதவியில் இருந்து நீக்கியதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
அதோடு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களின் செல்வாக்கை மக்கள் மத்தியில் ஆராயவும் உளவுத்துறையிடமிருந்து பட்டியல் வரவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலில் திமுகவிற்கு வெற்றி என்பது சாதகமற்றதாகவே உள்ளது என்று உளவு துறை அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர்களாலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களாலும் மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு பின்னடைந்து வருகின்ற நிலையில் உளவுத்துறை இடம் இருந்து பெறப்பட்ட அறிகையால் மிகவும் பதட்டத்திலும் பயத்திலும் முதல்வர் இந்த மே மாதம் முழுவதும் அதிரடியான தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த சம்பவமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மார்க்கில் விற்கப்பட்ட மதுபானத்தை குடித்தே இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் சிங்கப்பூர் சென்று வந்த கையோடு அடுத்த அமைச்சரவை மாற்றத்திற்கு முதல்வர் தயாராகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சராக செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட்டு வருவதாகவும் அறிவாலயம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதாவது கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை சமர்ப்பித்தார், அந்த புகாரில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்றும் அந்த நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்றும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து விரைவில் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.